» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கி சூடு நடத்தியதில் பலியானவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்

வியாழன் 24, மே 2018 3:07:54 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக நேற்று துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார் இதனை தொடர்ந்து காவல்துறை ஆக்கோரசமாக அணிவகுப்பு மேற் கொண்டது.விருப்பு வெறுப்புகளை மறந்து பணி செய்ய வேண்டிய காவல்துறை தனது தரப்பு நியாயத்தை தூக்கி பிடிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டது.அதன் விளைவாக அண்ணாநகரில் உள்ள அனைத்து தெருவிலும் கடைக்கு சாமான்கள் வாங்க வந்தவர்கள்,ஏ டி எம்களில் பணம் எடுக்க வந்தவர்கள், வேடிக்கை பார்த்த வெகு ஜன பார்வையாளர்களை எல்லாம் சந்தேகத்தின் பேரில் சட்ட விரோதமாக சுமார் 140 பேருக்கு மேல் கைது செய்தது.இதில் 15 வயதுக்கு குறைவானர்கள் என்பது தான் வேதனை.பல பெற்றோர்கள், உறவினர்கள் கைது செய்தது தெரியாது இரவில் கண்ணீர் விட்டனர்.வெளியே சென்ற பிள்ளைகள் எங்கே என்ற பரிதவிப்பு ஏற்பட்டது.


ஏதேனும் துப்பாக்கி சூடு நடத்திருக்குமோ ? என்ற படபடப்பு வேறு இதனை அறிந்த மாவட்ட வழக்கறிஞர் சங்கமும், முன்னாள் அரசு வழக்கறிஞர் சந்திரசேகரும் சேர்ந்து கானாமல் போனவர்கள் நிலை குறித்து மாவட்ட குற்றவியல் நீதிபதி பகவதியம்மாளிடம் மனு அளித்தனர்.இந்த மனுவின் ஏற்று ஆய்வு செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய விளாத்திகுளம் நீதிபதி காளிமுத்து வேலுக்கு உத்தரவு பிறப்பித்தார்.வடபாகம்,தெர்மல், முத்தையாபுரம்,தென்பாகம், சிப்காட் , புதுக்கோட்டை உள்ளிட்ட 6 காவல் நிலையத்தில் தேடியும் கைது செய்யபட்டவர்களை கண்டறிய முடியவில்லை.பின்னர் வழக்கறிஞர்கள் நீதியரசரிடம்  வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் ஆய்வு செய்ய முறையிட்டனர்.அதன் அடிப்படையில் ஆய்வு செய்த நீதியரசர் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட 140 பேரை கண்டறிந்தார். 15 வயதிற்கு உட்பட்டவர்களை விடுவித்து.

சுமார் 64 நபர்களை ஜே.எம் நீதிமன்ற நீதிபதி அண்ணாமலை முன் ஆஜர்படுத்த பட்டனர்.சட்ட விரோதமாக கைது செய்யபட்டு அடைத்து வைக்கபட்டவர்களுக்குஉணவு வழங்கபட்டதா ?, உடலில் காயம் ஏற்பட்டுள்ளதா ? என்பது குறித்து விசாரணை மேற் கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர் இதனை ஏற்று கொண்ட நீதிபதி அண்ணாமலை தனி மனுவாக தாக்கல் செய்ய அனுமதி அளித்தார்.மேலும் பலரை காணவில்லை என்ற புகாரை பெற்றோர்கள் கண்ணீருடன் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்திடம் முறையிட்டனர் இதனை தொடர்ந்து மாவட்ட குற்றவியல் நீதிபதி பகவதியம்மாள் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.இதனை கேட்ட மாவட்ட குற்றவியல் நீதிபதி பகவதியம்மாள் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.

இதில் தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ளாடைகளோடு சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட சுமார் 40 பேரை கண்டறிந்தார்.மாவட்ட வழக்கறிஞர்கள்  காவல்துறைக்கு எதிராக மக்களின் காவலராக பணியாற்றினார்.இத்தனை போராட்டங்களுக்கு நடுவில் மக்களின் துயரங்களுக்கு வழக்கறிஞர்கள் உறுதுணையாக நீதியை நிலைநாட்ட போராடினார்.இதை போல துப்பாக்கி சூடு நடத்தியதில் பலியானவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை பொது மக்களின் எதிர்பார்ப்பு


மக்கள் கருத்து

ஜ்வ்ஸ்மே 25, 2018 - 06:47:20 PM | Posted IP 108.1*****

போலீஸ் மீண்டும் மக்களோடுதான் வேலை பார்க்க வேண்டும்.. இனி போலீஸ் ந வெறுப்பு தான் வரும்... தனியா எங்க சிக்கினாலும் செத்தான்..ஜ்வ்ஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph Marketing


Nalam Pasumaiyagam

New Shape Tailors

Black Forest Cakes

Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory