» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ் : பிளஸ் 2 மதிப்பெண் முழு விபரம்

வியாழன் 17, மே 2018 10:45:44 AM (IST)

தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன் தினேஷ் மொத்தம் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.  

சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளி. இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த அவர், கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவன் தினேஷ் நல்லசிவன் மொத்தம் 1024 மார்க் எடுத்துள்ளார். அவர் தமிழ்ப் பாடத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 148 மதிப்பெண்ணும் இயற்பியலில் 186 மதிப்பெண்ணும் வேதியலில் 173, உயிரியலில் 129 மதிப்பெண், கணிதத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். இப்படி நல்ல மதிப்பெண் எடுத்தும் அதை பார்க்க தினேஷ் இல்லாதது அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals



Thoothukudi Business Directory