» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும்: பெற்றோர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!!

வியாழன் 17, மே 2018 10:29:23 AM (IST)

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறாத தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு அரசுப் பொதுத் தேர்வில் 20923 மாணவ / மாணவிகள் தேர்வு எழுதி 19985 மாணவ / மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.52 சதவீதம் ஆகும்.தேர்விற்காக உழைத்த தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

இத்தேர்வில் தேர்ச்சி வாய்ப்பை இழந்த மாணவ / மாணவிகளுக்கு உடனடியாக ஜுன் மாதம் 25ம் தேதி நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வில் பங்கு பெற்று மீண்டும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, மற்ற மாணவர்களை போன்று உயர்கல்வி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. மாணவ மாணவியர்கள் மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது வெற்றி பெறாத காரணத்திற்காகவோ எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கை இழக்காமல் அதே நேரத்தில் தவறான முடிவுகளை மேற்கொள்வதை தவிர்த்திடல் வேண்டும். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஆறுதலும், தன்னம்பிக்கையும் கொடுக்க வேண்டும். அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மன சோர்வுடன் உள்ள மாணவ / மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவிலும் / பெற்றோர்களும் அவர்கள் மன சோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு 24 மணி நேரமும் செயல்பட கூடிய உடனடி தகவல் மையம் (Help Line)பள்ளிக்கல்வி இயக்கத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி வாய்ப்பை இழந்த மாணவ / மாணவர்கள் / பெற்றோர்கள், இம்மையத்தை 14417 மற்றும் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளை பெறலாம். இம்மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மன நல வல்லுநர்கள் இம்மையத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள்.எனவே பெற்றோர்கள் மிக கவனத்துடன் இருந்து, தங்களது பிள்ளைகளை, அவர்கள் மறு தேர்வில் தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம் என்ற தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes

Joseph Marketing



Nalam Pasumaiyagam

CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory