» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது:

வியாழன் 17, மே 2018 9:33:36 AM (IST)

தூத்துக்குடியில் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தில் கடந்த 14ம் தேதி இரவு சிலர் வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்தியிருந்த நிலையில் நள்ளிரவில் குடிபோதையில் வந்த மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்கினர். இதில் 2 கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு வேன், ஒரு மினிலாரி, ஒரு லோடு ஆட்டோ என மொத்தம் 6 வாகனங்களின் கண்ணாடிகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலை அடுத்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 

பின்னர் இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஜேசு என்ற உலகராஜா (29) என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் செல்சினி காலனியை சேர்ந்த அய்யனார், 3 செண்டை சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 3 பேருக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரையும், தமிழரசையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்து வந்த சுதாகரை (24) தேடி வந்தனர். இந்நிலையில் அவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


crescentopticals
Thoothukudi Business Directory