» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வைகாசி அவதார திருவிழா: 19ம் தேதி துவக்கம்

வியாழன் 17, மே 2018 9:31:25 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசிஅவதார திருவிழா நாளை மறுதினம் (19ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

நவதிருப்பதிகளில் 9வது ஸ்தலமாகவும், குரு ஸ்தலமாகவும் திகழும்ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதார திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 7 மணிக்கு மேல் கொடியேற்றமும், இரவு ஸ்ரீநம்மாழ்வார் வீதியுலா நடக்கிறது. 20ம்தேதி இரவு புஷ்பபல்லக்கிலும். 21ம்தேதி இரவு தங்கபுன்னை மர வாகனத்தில்நம்மாழ்வார் வீதியுலாவும் நடக்கிறது. 

23ம்தேதி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளிங்குடி காய்சினிவேந்தபெருமாள், பெருங்குளம், மாயக்கூத்தப்பெருமாள், தென்திருப்பேரை நிகரில்முகில் வண்ணன், தொலைவில்லிமங்கலம், அரவிந்த்லோசனர், இரட்டைதிருப்பதிதேவர்பிரான், திருக்கோளுர் ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் ஆகியோரை வரவேற்று மங்களாசாஸனம் நடக்கிறது. பகல்11.30 மணிக்கு நம்மாழ்வார் வீதியுலாவும் இரவு 9 கருடசேவையும் நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் மதுரகவிஆழ்வார் தங்கபல்லக்கில் வீதியுஉலா நடக்கிறது.

28ம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு சிங்கபெருமாள் சன்னதியில் திருமஞ்சனம் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரியும் பெரிய சன்னிதிக்கு எழுத்தருளி கோஷ்டி, தீர்த்த விநியோகம் நடக்கிறது. இரவு வெட்டிவேர் சப்பரத்தில் வெள்ளி தோளுக்கினியன் வாகனங்களில் சுவாமி பொலிந்து நின்றபிரான் நம்மாழ்வார் உடையவர் ஆகியோர் வீதிஉலா நடக்கிறது. 29ம்தேதி 11ம் திருவிழா முன்னிட்டு காலை சுவாமி நம்மாழ்வார் மத்மனவாள மாமுனிகள்சன்னிதிக்கு எழுத்தருளி கந்த பொடி உத்ஸவம், திருமஞ்சனம் கோஷ்டி பல்லக்கில் சன்னிதிக்கு ஆஸ்தானம் எழுந்தருளி நடந்தது. இரவு பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் வீதிஉலாவும் தொடர்ந்து 30ம்தேதி வரை விடையாற்றும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விஸ்வநாத் பக்தர்கள் உபயதாரர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads
Joseph Marketing

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape TailorsThoothukudi Business Directory