» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாயமான மூதாட்டி மர்மச் சாவு: போலீஸ் விசாரணை

வியாழன் 17, மே 2018 9:29:25 AM (IST)

குரும்பூர் அருகே மாயமான மூதாட்டி மர்மமான முறையில் கிணற்றுப் பகுதியில் இறந்து கிடந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள வரண்டியவேலை சேர்ந்தவர் கார்மேகராஜ் மனைவி பட்டுக்கனி (65). கணவரது மறைவுக்குப் பிறகு சென்னையில் அவரது மகன் மேகவர்ணம் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரில் நடந்த கோயில் கொடை விழாவுக்கு பட்டுக்கனி குடும்பத்தினருடன் வந்தார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி திடீரென மாயமானார். இதனால் பதறிய குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் பட்டுக்கனி நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி ரயில்வே கேட் அருகேயுள்ள கிணற்றுப் பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மற்றொரு மகன் கார்வண்ணன் கொடுத்த புகாரின் ேபரில் விரைந்து வந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜ், எஸ்ஐ துரை மற்றும் போலீசார், பட்டுக்கனியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory