» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்விரோதத்தில் வாலிபரை வெட்டியவருக்கு வலை

வியாழன் 17, மே 2018 9:26:53 AM (IST)

கோவில்பட்டியில் முன் விரோதத்தில் வாலிபரை சரமாரியாக வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரபாண்டிநகரை சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம் (40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த களஞ்சியம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு 9 மணிக்கு ஆனந்த் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு அத்துமீறி அரிவாளுடன் புகுந்த களஞ்சியம், ஆனந்தை சரமாரியாக வெட்டினார். 

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்தை அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த டிஎஸ்பி ஜெபராஜ், மேற்கு இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான களஞ்சியத்தை தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD
crescentopticals

Thoothukudi Business Directory