» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்டியில் கட்டப்பட்டிருந்த 8 ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

வியாழன் 17, மே 2018 9:23:08 AM (IST)

விளாத்திகுளம் அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த  8 ஆடுகள் திருடு போடினது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கே.துரைசாமி புரத்தை சேர்ந்த ராமசாமி மகன் முத்துமாாியப்பன் (38). இவரும், அதே ஊரைச் சேர்ந்த பொன்ராஜ் மனைவி பெருமாளக்காள் (31) என்பவரும் விவசாயம் செய்துவந்ததோடு ஆடுகளும்  மேய்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு தூங்கச் சென்றனர். 

நேற்று வழக்கம்போல் காலை ஆடுகளுக்கு உணவு வைக்கச் சென்றனர். அப்போது பட்டியில் கட்டப்பட்டிருந்த முத்து மாரியப்பனுக்கு சொந்தமான 4 ஆடுகளையும், பெருமாளக்காளுக்கு சொந்தமான 4 ஆடுகளையும்  மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். புகாரின் பேரில் காடல்குடி போலீசாா் வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


Joseph MarketingNew Shape TailorsThoothukudi Business Directory