» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை: போலீஸ் விசாரணை

வியாழன் 17, மே 2018 9:15:23 AM (IST)

கயத்தாறில் பெற்றோர் வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த முருகையா மகன் பாலமுருகன் (25). இவர் கடந்த சில நாள்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இதையடுத்து அவரது பெற்றோர் வேலைக்குச் செல்ல வற்புறுத்தினராம். 

இந்நிலையில் இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த கயத்தாறு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD





crescentopticals




Thoothukudi Business Directory