» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொத்தனார் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

வியாழன் 17, மே 2018 9:11:00 AM (IST)

ஆறுமுகனேரியில் கொத்தனார் கொலை வழக்கில் நேற்று மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், பூந்தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன்( 28). கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர், கடந்த மாதம் 23ஆம் தேதி ஆறுமுகனேரி ஜெயின் நகர் அருகே பட்டப்பகலில் 5 பேர் கும்பலால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மணிகண்டன் நண்பரான ஆறுமுகனேரி, பேயன்விளையைச் சேர்ந்த ஜெய்சங்கருக்கும் அவரது அண்ணன் விஜயனுக்கும் சொத்துத் தகராறு இருந்ததாகவும், மணிகண்டன் ஜெய்சங்கருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், விஜயனின் மைத்துநர் பேயன்விளை புதூரைச் சேர்ந்த சிவகுமார் (40), அவரது தம்பி விக்னேஷ்வரன், கார் ஓட்டுநர் சந்திரசேகரன், மேல ஆழ்வார்தோப்பைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பெரியசாமி (31) உள்பட 5 பேர் சேர்ந்து மணிகண்டனை கொன்றதாக, போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் சிவகுமார், சந்திரசேகரன், பெரியசாமி ஆகிய மூவரும் மதுரை அருகேயுள்ள வாடிபட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை கடந்த 5ஆம் தேதி ஆறுமுகனேரி போலீசார்காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், விக்னேஷ்வரனை ஆறுமுகனேரி ஆய்வாளர் சம்பத், தனிப்படை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals


New Shape Tailors
Thoothukudi Business Directory