» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 தேர்வு: கணிதத்தில் 47 பேர் 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை

வியாழன் 17, மே 2018 9:07:40 AM (IST)

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்குப் பதிவியலில் 97 பேர், கணிதத்தில் 47 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட தற்போது குறைவான மாணவர், மாணவிகளே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணக்குப் பதிவியலில் அதிகபட்சமாக 97 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், கணிதத்தில் கடந்த ஆண்டு 88 பேர் 200 மதிப்பெண்களை பெற்றிருந்த நிலையில், தற்போது 47 பேர் மட்டுமே 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதேபோல், வேதியியலில் 3 பேர், தாவரவியலில் ஒருவர், விலங்கியலில் ஒருவர், கணினி அறிவியலில் 9 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியலில் 45 பேரும், கணக்குப் பதிவியலில் 97 பேரும், வணிக கணிதத்தில் ஒருவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், உயிரியல், வரலாறு, உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், தட்டச்சு, அலுவலக மேலாண்மை ஆகிய பாடங்களில் யாரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெறவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory