» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலைக்கு இடம் ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமமுக புகார் மனு

புதன் 16, மே 2018 9:06:45 AM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடம் ஒதுக்கியது தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக கட்சியினர் மனு அளித்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலர் இரா. ஹென்றி தாமஸ், துணைச் செயலர் ஜெ. பாலன் மற்றும் நிர்வாகிகள்  நேற்று அளித்த மனு விவரம்: தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்காக சிப்காட் பகுதியில் 324 ஏக்கர் நிலம் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

முறைகேடாக வழங்கப்பட்டுள்ள இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ஏறத்தாழ ரூ. 64.80 கோடி ஆகும். எனவே, ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கிய சிப்காட் திட்ட அதிகாரி, மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்மே 16, 2018 - 02:10:34 PM | Posted IP 172.6*****

இது உண்மை உண்மை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


crescentopticals





Thoothukudi Business Directory