» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அதிநவீன காவல் கட்டுப்பாட்டு அறை: வஉசி துறைமுகசபை தலைவர் திறந்து வைத்தார்.

புதன் 9, மே 2018 12:19:08 PM (IST)



தூத்துக்குடியில் அதிநவீன காவல் கட்டுப்பாட்டு அறையை வஉசி துறைமுகசபை தலைவர் ஜெயகுமார் திறந்து வைத்தார். 

தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவல் கட்டுப்பாட்டு அறை, வஉசி துறைமுக சபையின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30லட்சம் மதிப்புள்ள அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வஉசி துறைமுகசபை வழங்கியுள்ளது. இந்த நவீன கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா இன்று எஸ்பி மகேந்திரன் தலைமையில் நடந்தது. வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ஜெயகுமார் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.  

பின்னர், இதுகுறித்து தூத்துக்குடி நகர ஜேஎஸ்பி செல்வன் நாகரத்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி வஉசி துறைமுகசபை உதவிடன் காவல்துறை கட்டுப்பாட்டு அறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. 4 டிவிகள் கொண்ட விடியோ சுவரில் தற்போது 9 டிவிகள் பொருத்தப்பட்டுள்ளது. 10 ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, குற்ற நிகழ்வுகளில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். தூத்துக்குடி மாநகரில் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற நிகழ்வுகள் தடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், தாளமுத்துநகர், தெர்மல் நகர், முத்தையாபுரம் உட்பட தூத்துக்குடி உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. 10 கிமீ தூரம் வரை, இரவிலும் செயல்படும் வகையில் துல்லியமான அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இனிவருங்காலங்களில் 400 கேமராக்கள் செயல்படுத்தும் அளவிற்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி மாநகரில் சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் வஉசி துறைமுக தலைமை பொறியாளர் (இயந்திரவியல்) சுரேஷ்பாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்மே 9, 2018 - 05:37:29 PM | Posted IP 141.1*****

நாதஸ் (JSP) இப்போ ரொம்ப திருந்திட்டார் சார். யார் சொன்னா? அவரே சொன்னார். அப்ப சரி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory