» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு விதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

வெள்ளி 4, மே 2018 3:11:58 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வழிமுறைகளை பின்பற்றாமல் இயக்கப்படும் வாகனத்தின் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை என ஆட்சியர் என்.வெங்கடேஷ்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாகனங்களை முறையாக பராமரிக்காமல், வாகன வழிமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் சரியான ஒழுங்கான முறையில் பராமரிக்கப்பட்டு இயங்குகிறதா என்பதை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்து, அந்த வாகனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்கடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், அந்தந்த வட்டாரத்திற்குட்பட்ட பள்ளிகளின் வாகனங்கள் ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் இன்று (04.05.2018) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்கவேண்டும் என்பதற்காக, 2012-ஆம் ஆண்டு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. 

மேலும், அனைத்து வாகனங்களையும் அரசு விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றிப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய பள்ளி விடுமுறை காலங்களில், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று தூத்துக்குடி வட்டாரத்திற்குட்பட்ட பள்ளி வாகனங்களை முதற்கட்டமாக வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த வாகனத்தில் முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் பள்ளி மாணவ, மாணவியர்களை வெளியேறுவதற்கான அவசர வழி, பிரேக், இருக்கைகள், வாகனங்களின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள ஒளி விளக்குகள், வாகனத்தின் கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை சரியான முறையில் இருக்கிறதா என்பதையும், அரசு விதித்த அனைத்து வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. ஆய்வின் முடிவில் வாகனங்களை முறையாக பராமரிக்காமல், வாகன வழிமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி வட்டத்தில் 172 வாகனங்களும், கோவில்பட்டி வட்டத்தில் 186 வாகனங்களும், திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட 102 வாகனங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 460 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார். இவ்ஆய்வின் போது சார் ஆட்சியர் பிரசாந்த் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.ரங்கநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜேஷ், உலகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஒருவன்மே 4, 2018 - 04:10:41 PM | Posted IP 141.1*****

சரி.. கொஞ்சம் சேதமடைந்த சாலையை சரி பண்ணினால் நல்லா இருக்குமே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Joseph MarketingcrescentopticalsThoothukudi Business Directory