» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்

சனி 28, ஏப்ரல் 2018 12:07:03 PM (IST)தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை அருள்மிகு சந்திர ராமேஸ்வரர், அன்னை பாகம்பிரியாள் மற்றும் விநாயகர் பரிவாரவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது.

இதில் சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் அன்னை பாகம்பிரியாளர் உடனுறை சங்கர ராமேஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வருகை தந்தது. தேருக்கு நாட்டுப்புற கலை நிகழ்சிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. கீழரதவீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது.தேரோட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நிர்வாகிகள் முருகன், பிடிஆர் ராஜகோபால், ஜோதிமணி, அமிர்தகணேசன், டாக்டர் முத்துராஜ், உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாலசுப்பிரமணிய ராஜன், கோவில் நிர்வாக அதிகாரி அஜித், ஆர்.செல்வம் பட்டர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

தமிழன்Apr 28, 2018 - 07:30:11 PM | Posted IP 162.1*****

கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்தது... மாநகராட்சியின் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு படு மோசம், ரத வீதிகளின் சாலைகளை சரியாக செப்பனிடவில்லை, மேலும் கழிவுநீர் ஓடையும் சரியாக பராமரிக்கப்படவில்லை, ஒரு பக்தர் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார் தேர் வரும்பொழுது... காவல்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவதைவிட தேரை வேகமாக நகர்த்தி நிலையில் சேர்பதையே குறியாக இருந்தனர். குறுக்கும்மருக்கும்மாக வந்த காவல்துறையினரின் சூ காலினால் தேரிழுக்கும் போது மிதி வாங்கிய பக்தர்கள் அதிகம். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய....

nagarajApr 28, 2018 - 01:42:13 PM | Posted IP 162.1*****

உள்ளூர் விடுமுறை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNew Shape Tailors

CSC Computer Education


crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory