» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித லூக்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா

வியாழன் 19, ஏப்ரல் 2018 3:21:24 PM (IST)மருத்துவத் துறையில் செவிலியர்கள் இருதயத்தைப் போன்றவர்கள் என நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு நர்சஸ் அன்ட் மிட்வைவ்ஸ் கவுன்சில் பதிவாளர் டாக்டர் எஸ்.அனி கிரேஸ் கலை மதி பேசினார்.

தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் சார்பில் நாசரேத் - திருமறையூரில் செயல்பட்டு வரும் புனித லூக்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டலப்பேராயர் எஸ்.இ.சி.தேவசகாயம் தலைமை வகித்து, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி விழாப் பேரூரையாற்றினார். திருமண்டல துணைத் தலைவர் எஸ்.ஜி. லூர்துராஜ் ஜெயசிங் விழா ஆரம்ப ஜெபத்தை ஏறெடுத்தார். தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் வரவேற்று பேசினார். சிறப்புவிருந்தினரை கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயராணி பிரேம் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு நர்சஸ் அன்ட் மிட் வைவ்ஸ் கவுன்சில் பதிவாளர் டாக்டர் எஸ்.அனி கிரேஸ் கலைமதி பேசுகையில்: இன்றைய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை எந்த கோர்சில் படிக்க வைத்தால் வேலை கிடைக்கும், கிடைக்காது என்ற சந்தேகத்துடன் படிக்கவைத்து வருகின்றனர். ஆனால் ஒரே கல்லில் இரண்டு  மாங்கா என்று சொல்வார்கள் அதுபோல பி.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பை பயின்றால் படிப்பிற்கு பட்டமும், வேலையும் கிடைக்கும். இதற்கு தான் ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்று சொல்வார்கள்.

உலகத்தில் பிறப்பு, இறப்பு என்ற ஒன்று இருக்கும் வரை செவிலியர்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் கிடையவே கிடையாது. செவிலியர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு உள்ளது. கடவுள் உங்களையும், என்னையும் செவிலியர் பணிக்கு தொண்டு செய்வதற்காகவே படைத்துள்ளார். இல்லாவிட்டால் இந்த துறைக்கு நாம் வந்திருக்கவே முடியாது. இன்றைய பட்டமளிப்பு விழாவில் மாணவர்களாகிய நீங்கள் செவிலியர் துறையில் பணியாற்றுவதற்கான தகுதியும்,அதற்காக பதியவும், அதற்கான அங்கீகாரமும் இன்று முதல் பெறுவதற்கு தகுதி படைத்தவர்களாகிறீர்கள். உங்களது பெயர் பலகையில் பெயருக்கு பின்னால் ஆர்.என்.ஆர்.எம். என்று போடுவதற்கு தகுதி படைத் தவர்களாகிறீர்கள்.

ஒரு மனிதனுக்கு எப்படி இருதயம் முக்கியமானதோ அதுபோன்று மருத்துவ துறைக்கு செவிலியர்கள்.மருத்துவத்துறையில் செவிலியர்கள் இருதயத்தை போன்ற வர்கள்.நாங்கள் செவிலியர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமைகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் நாசரேத் கதீட்ரல் தலைமைப் பாதிரியார் எஸ்.எட்வின் ஜெபராஜ் நிறைவு ஜெபம் செய்தார். பேராயர் ஆசி வழங்கினார். விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், பேராயரின் துணைவியார் சாந்தினி தேவசகாயம், நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷியஸ் தேவ தாஸ், புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ராயல்Apr 19, 2018 - 06:17:57 PM | Posted IP 172.6*****

CONGRATS

makkalApr 19, 2018 - 05:25:31 PM | Posted IP 162.1*****

welcome

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


CSC Computer Education
New Shape TailorsThoothukudi Business Directory