» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி

வியாழன் 19, ஏப்ரல் 2018 1:44:35 PM (IST)திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை மிகவும் தரம் தாழ்த்தி ட்விட்டரில் பதிவு செய்ததாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து அவரது உருவபொம்மையை துாத்துக்குடியில் திமுக மகளிரணியினர்ர்தீ வைத்து கொளுத்தினார்கள். 

பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி ஆகியோர் பற்றி பதவிட்ட செய்தி திமுகவினர் மத்தியில் கடும் ஆத்திரத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த திமுக தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் துாத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டதோடு திடீரென எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். 

மேலும் துடைப்பத்தை கொண்டும் அடித்தனர். தொடர்ந்து எச்.ராஜாவுக்கும் பாஜகவுக்கும் எதிராக கோஷமிட்டனர். இந்த கண்டன போராட்டத்திற்கு துாத்துக்குடி மாவட்ட திமுக மகளிரணி செயலாளர் முன்னாள் மேயருமான கஸ்துாரிதங்கம் தலைமை தாங்கினார்.மகளிரணி நிர்வாகிகள் ஜான்சிராணி உமாதேவி ஜெயக்கனி ஜோதி மற்றும் திமுக நிர்வாகிகள் சுரேஷ் ரவி அருண்சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆனால் இச்சம்பவத்தை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

தூத்துக்குடிApr 19, 2018 - 05:50:10 PM | Posted IP 141.1*****

DMK டுபாகூர் ஆகி விட்டது .... கலைஞர் நன்றாக இருந்தால் கதையே வேறு . இவனுங்கள இத விட அசிங்கமா கேட்டாலும் சூடு சொரணை இல்லமா போராடத்தான் செயுவனுங்க

சாம்Apr 19, 2018 - 04:08:47 PM | Posted IP 141.1*****

இவர்களே பிஜேபியை வளக்கிறார்கள்

johnsApr 19, 2018 - 03:10:24 PM | Posted IP 172.6*****

ஆன்டி modi

தமிழன்Apr 19, 2018 - 02:01:01 PM | Posted IP 172.6*****

போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது குறிப்பிடத்தக்கது? எதனால்? இது அனுமதி வாங்கி நடத்திய போராட்டமோ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD
crescentopticals

Thoothukudi Business Directory