» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய பறவையின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை: வனத்துறைக்கு தூத்துக்குடி மக்கள் கோரிக்கை

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 11:32:39 AM (IST)



தூத்துக்குடியில், தேசிய பறவையான மயில் மின்சார  கம்பிகளில் சிக்கி இறப்பது அதிகரித்து வருகிறது. வனத்துறை அதிகாரிகள்  இதை கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். 

தூத்துக்குடி புதுக்கிராமம், கால்நடை மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. வனப் பகுதிகளில் வாழும் மயில்கள் அங்கு போதிய உணவு  கிடைக்காமல் இடம் பெயர்ந்து தூத்துக்குடி நகரைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு அவை இடம்பெயர்ந்து உள்ளதாகத் தெரிகிறது. அவை மரங்கள், பெரிய கட்டிடங்களில் வசித்து வருகின்றன. இவை இரை  தேடுவதற்காகவும், தண்ணீர் குடிப்பதற்காகவும் பறந்து செல்லும்போது மின்  கம்பிகளில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. 

சில நேரங்களில் மயில்கள் காயம் அடைகின்றன. இந்நிலையில், நேற்று புதுக்கிராமம் தட்டச்சு பயிற்சி நிலையம் அருகே மயில் ஒன்று மின்வயரில் அடிபட்டு கீழே விழுந்தது. காயம் அடைந்த அந்த மயிலால் பறக்க முடியாமல் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் எந்த நடவடிக்கையைும் எடுக்கவில்லை. காயத்துடன் அந்த மயில் இன்று 2வது நாளாக போராடி வருகிறது. தேசியப் பறவையான மயில் உயிரிழப்புகளை தடுக்க வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education



Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory