» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் பொருட்களை விட்டு கொடுத்தல் திட்டம் அறிமுகம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!!

திங்கள் 16, ஏப்ரல் 2018 5:13:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைதார்கள் தங்களுக்கு தேவியில்லை எனக் கருதும் பொருட்களை விட்டு கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 4,71,857 மின்னணு குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது.  இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி இலவசமாகவும், சீனி, பருப்பு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் அரிசி, பருப்பு, சீனி, பாமாயில் போன்ற பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு சென்று வாங்குவது இல்லை.

இவ்வாறு வாங்காத பொருட்களை போலிப் பட்டியல் மூலம் விற்பனை செய்ய முயல்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.  இதனை தவிர்க்க, உணவுப்பொருள் வழங்கல் துறை விட்டுக் கொடுத்தல் என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.  இந்த திட்டத்தில் குடும்ப அட்டைதாரர் அரிசி, சீனி, பருப்பு, பாமாயில், கோதுமை  ஆகிய உணவுப் பொருட்கள் தங்களுக்கு தேவை இல்லை எனக் கருதினாலோ, அல்லது சில மாதங்களுக்கு மட்டும் தேவை இல்லை என்றாலோ அல்லது சில பொருட்கள் தேவையில்லை எனக் கருதினாலும் இந்த திட்டத்தின் மூலம் பொருட்களை விட்டுக் கொடுக்கலாம்.

விட்டுக் கொடுக்கும் திட்டத்தின் காரணமாக குடும்ப அட்டை ரத்து செய்யப்படமாட்டாது.  மேலும் போலிப் பட்டியல் மூலம் விற்பனை செய்யப்படுவதும் தடுக்கப்படும்.  இது தவிர எந்த பொருளும் தேவை இல்லை எனில் அவர்கள் None Card எனப்படும் எப்பொருளும் வேண்டாதோர் அட்டையாகவும் மாற்றிக் கொள்ளலாம்.  இது தொடர்பான தகவல் அறிய www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது tnepds என்ற செல்போன் செயலி மூலமாகவோ அல்லது 9445000370 என்ற செல்போன் எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals




New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory