» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: ரூ.28 லட்சம் நலதிட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

திங்கள் 16, ஏப்ரல் 2018 4:05:16 PM (IST)சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 248வது பிறந்த தினத்தை முன்னிட்டு 110 பயனாளிகளுக்கு ரூ.28,17,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ அமைச்சர் வழங்கினார்,.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், கவர்னகிரி வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 248வது பிறந்த நாள் விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, அன்னாரது திருவுருவச்சிலைக்கு இன்று (16.4.2018) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சமூக நலத்துறையின் சார்பில் 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் என ரூ.10,50,000/- க்கான காசோலையினையும், மகளிர் திட்டத்தின் மூலம் 18 சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதியாக தலா ரூ. 10 ஆயிரம், பணிபுரியும் பெண்கள் 10 பேருக்கு தலா ரூ.25,000/- மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனமும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 40 பயனாளிகளுக்கு விபத்து மற்றும் இறப்பு உதவித் தொகைக்கான ரூ.10,15,000/- க்கான காசோலையினையும், 14 பயனாளிகளுக்கு ரூ.3,22,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.28,17,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் வீரன் சுந்தரலிங்கம் வழித்தோன்றல் சி.பொன்ராஜ், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, கோவில்பட்டி கோட்டாச்சியர் பி.அனிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், மகளிர் திட்ட அலுவலர் .ரேவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், மாவட்ட சமூக நல அலுவலர் .கு.தனலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, ஓட்டப்பிடாரம் வட்டாச்சியர் டி.ஜாண்சன் தேவசகாயம், வட்டாட்சியர் (ச.பா.தி) ஞானராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.முத்துக்குமார், மு.சிவபாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Joseph Marketing


New Shape Tailors

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory