» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் போராட்டம்: 12பேர் கைது - 250பேர் மீது வழக்குப்பதிவு

திங்கள் 16, ஏப்ரல் 2018 3:42:46 PM (IST)தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக இதுவரை 250பேர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி  தூத்துக்குடியில் 16 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தினமும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், திமுக இளைஞர் அணி ஜோயல், திருமுருகன் காந்தி, வக்கீல் வளர்மதி உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிப்காட் காவல் நிலையத்தில இதுவரை 250பேர் மீது 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 150 வழக்குகளுக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 12பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அரசுப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், மிரட்டல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, தென்பாகம் காவல் நிலையம், வடபாகம் காவல் நிலையம், புதுக்கோட்டை காவல் நிலையங்களிலும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

மக்கள்Apr 17, 2018 - 01:11:36 PM | Posted IP 141.1*****

எத்தனை பேர் மேல வழக்கு போடுவிங்க 500 இல்ல 1000 நீங்க எத்தனை பேர் மேல வழக்கு போட்டாலும் போராட்டம் தொடரும் வெற்றி அடையும் பின்வாங்க மாட்டோம்

நண்பன்Apr 17, 2018 - 12:35:58 PM | Posted IP 141.1*****

பாதிப்பை உண்டுபன்னின ஆலை மீது நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மீது நடவடிக்கையா ....... ?. கட்சிகளிடமிருந் ஓட்டுக்கு பணம், இலவசங்கள் மற்றும் Sterlite யிடமிருந்து மக்களை ஏமாற்றும் தந்திரமான சலுகைகளை பெற்ற ஒவொருவருக்கும் இது நல்ல பாடம்....

சாமான்யன்Apr 16, 2018 - 10:54:51 PM | Posted IP 172.6*****

வழக்குகள் நிறைய வந்தால் வருமானமும் நிறைய வரும் என்பது ஆன்றோர் வாக்கு!

வடிவேல்Apr 16, 2018 - 05:05:07 PM | Posted IP 141.1*****

வழக்குகள் நிறைய வந்தால் நன்மைக்கே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing
crescentopticals

New Shape Tailors

Thoothukudi Business Directory