» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வாகனம் அடித்து உடைப்பு: போராட்டக்குழுவினர் ஆவேசம் - பெண் ஊழியர்கள் அச்சம்

வியாழன் 12, ஏப்ரல் 2018 12:29:35 PM (IST)தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஊழியர்கள் வந்த வாகனத்தை போராட்டக்குழுவினர் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். தூத்துக்குடி மடத்தூர் அருகே  பாத்திமாபாபு, கிருஷ்ணமூர்த்தி, பிரபு, மகேஸ், தெர்மல்ராஜா, தமிழ்செல்வன் உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியுள்ளனர். 

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. வாகனங்களில் இருந்த பெண்களும், சிறு குழந்தைகளும் பீதியடைந்து, பேருந்திலிருந்து இறங்கி ஒட்டம் பிடித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் இல்லாததால் அங்கு பதற்றம் அதிகரித்தது. மேலும், ஸ்டெர்லைட் பெண் ஊழியர்கள் வந்த வேனின் சாவியை பறித்து போராட்டக் குழுவினர் பெண்களை அவதூறாக பேசி மிரட்டினர். இதனை படம் எடுத்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களையும் போராட்டக்குழு ஆபாச வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்தது. இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் அரிகரன் தலைமையிலான போலீசார் போராட்டக்குழுவினரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்ல மறுக்கவே தடியடி நடத்தப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து போராட்டக்குபவினர் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நான்கு வழிச்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து

கீ teerApr 12, 2018 - 05:37:20 PM | Posted IP 162.1*****

ஸ்டெர்லிட் காரர்களுக்கு வீடு மற்றும் அணைத்து சப்ளைகலை தடை செய்ய வேண்டும் ,ஸ்டெர்லிட் கு பவர் ,வாட்டர் , டிரான்ஸ்போர்ட் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

brightApr 12, 2018 - 04:23:37 PM | Posted IP 172.6*****

மகிழ்ச்சி

TutyApr 12, 2018 - 02:42:05 PM | Posted IP 162.1*****

Tuty oru sila comments mattumay inga pathiya padukirathu (sterlite suppota)

மனுசன பேசுApr 12, 2018 - 02:39:40 PM | Posted IP 162.1*****

ஐயா உண்மை ...10000 பேர் வாழுரதுக்கு 1000000 பேர் சாக முடியுமா? இவங்க போராட்டத்த ஏற்க முடியுமா????

mravanApr 12, 2018 - 02:28:36 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். sterlite பணியாளர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடாதீர். காளி பண்ண சொல்லுங்க.

MANIApr 12, 2018 - 02:26:53 PM | Posted IP 162.1*****

Sterlite தூத்துக்குடி மக்களின் உண்மையான முகத்தை சீக்கிரத்தில் பார்க்கும் நிலை வந்துவிட்டது.

ManithanApr 12, 2018 - 02:25:05 PM | Posted IP 162.1*****

எத்துணை நாள் அமைதியாக போராடுவது. ..முடிவு?

GeethaApr 12, 2018 - 01:25:19 PM | Posted IP 172.6*****

Antha ammavukku yellorudiya kavanmum namma mel irukkanum nu aasai... Antha raja mela 3case irukki

ஆப்Apr 12, 2018 - 01:03:18 PM | Posted IP 172.6*****

இங்க யாரும் சட்டத்தை கையில் எடுக்கல.ஆனா கையில எடுக்க தூண்டுறாங்க.இது ஒரு நியாமான மக்கள் போராட்டம். பின்னாடி இருந்து sadhi செய்பவர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் அவர்களை ஒடுக்க வேண்டும்.

ஜவஹர் ஜான்Apr 12, 2018 - 01:03:04 PM | Posted IP 172.6*****

பாராட்டுதலுக்குஉரியது

ஜவஹர் ஜான்Apr 12, 2018 - 01:03:02 PM | Posted IP 172.6*****

பாராட்டுதலுக்குஉரியது

மனிதன்Apr 12, 2018 - 12:55:52 PM | Posted IP 162.1*****

நீ கைக்கூலி

உண்மைApr 12, 2018 - 12:47:03 PM | Posted IP 172.6*****

பாத்திமாபாபுவின் இதுபோன்ற அடாவடித்தனம் அவர் மீதுள்ள மதிப்பை குறைக்கும். ஜனநாயக வழியில்தான் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும், சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கக்கூடாது. ஜனநாயகநாட்டில் ஸ்டெரிலைட் ஊழியர்களுக்கும் ஜனநாயக வழியில் போராட உரிமை உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer EducationAnbu Communications

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory