» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வலியுறுத்தி ஊழியர்கள் பேரணி : ஆட்சியரிடம் மனு

வியாழன் 12, ஏப்ரல் 2018 11:12:19 AM (IST)தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் இன்று ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் 60-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பண்டாரம்பட்டி, சங்கராப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், பாளையாபுரம், தூத்துக்குடி 3-வது மைல், தபால் தந்தி காலனி, முருகேசன் நகர் என மொத்தம் 12 இடங்களில் நடந்து வரும் போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். 

மேலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆலையை மூட வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் கண்டன பொதுக்கூட்டமும் தூத்துக்குடியில் நடந்தது. இந்நிலையில், தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக அந்நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களது குடும்பத்தினருடன் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் சென்றனர். இதில் சுமார் 3ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.  மேலும் அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் வரும் என வதந்தி பரப்பப்படுவதாக அவர்கள் முழக்கமிட்டனர்.. 

அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் : தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பசுமை வளர்ச்சிக்கு முன்னோடியாக உள்ளது. ஆலையைச் சுற்றி ஆரோக்கியமான சூழல் நிலவுவதாக வன ஆராய்ச்சி நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. காப்பர் ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவதில்லை. உபயோகப்படுத்தப்படும் நீரானது, 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீர் காற்று மாசுபடுவதற்கு வாய்ப்பே இல்லை. 

உபயோகப் பொருட்களான காப்பர் ஸ்லாக், ஜிப்சம் போன்றவை கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையால், தூத்துக்குடியில் மழை வளம் பாதிப்பு எதுவும் அடையவில்லை. கடந்த 14ம் தேதி 200.8 மிமீ மழை பெய்துள்ளது. இது கடந்த 65 ஆண்டுகளில் அதிகபட்ச மழை அளவாகும். ஸ்டெர்லைட் ஆலை, இளம் சிறார்களுக்கு கல்வி ஆரோக்கியமான உணவு, மருத்துவ பரிசோதனைகளையும் வழங்கி வருகிறது. ஆலை குறித்து கற்பனையான வதந்திகள் பரப்பப்படுவதாகவும், ஆலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டு என  அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 


மக்கள் கருத்து

உண்மைApr 13, 2018 - 01:17:41 PM | Posted IP 141.1*****

எங்களோட முடிவு ஒண்ணுதான் sterlite ஆலை மூடப்படவேண்டும்

Jeba, QatarApr 12, 2018 - 08:50:20 PM | Posted IP 162.1*****

Ban Sterlite

தமிழன்Apr 12, 2018 - 03:16:16 PM | Posted IP 162.1*****

ban Sterlite

மணிApr 12, 2018 - 12:45:25 PM | Posted IP 162.1*****

"தங்களது குடும்பத்தினருடன் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் சென்றனர். இதில் சுமார் 3ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளன" ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு மட்டும் ஊர்வல அனுமதி நல்ல மாவட்ட ஆட்சியர்

உங்களில் ஒருவன்Apr 12, 2018 - 12:34:06 PM | Posted IP 172.6*****

ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் ஊற விட்டு ஓடிரு... எங்கேயொருந்து வந்து தூத்துக்குடியெ நாசம் பண்ணுனது போதும்...

மக்கள்Apr 12, 2018 - 12:09:42 PM | Posted IP 141.1*****

காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியும்மட

ThoothukudiApr 12, 2018 - 11:51:58 AM | Posted IP 141.1*****

Dai Pradu, Total participate members only 80 persons, don't spread the foke news

ராம்Apr 12, 2018 - 11:29:55 AM | Posted IP 162.1*****

இப்போ சுனாமி வரணும் ,..... 3000 கிளோஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam


CSC Computer Education

Thoothukudi Business Directory