» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை : ஏப்.11 முதல் ஆய்வுப் பணிகள் அதிரடி தொடக்கம்!!

புதன் 4, ஏப்ரல் 2018 4:30:56 PM (IST)

தூத்துக்குடியில் பொதுமக்கள் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாநராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகரில் கோடைகாலம் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர்கசிவுகள் வால்வு தொட்டிகளில் உள்ள கசிவுகள் மற்றும் குடிநீர் பிரதான குழாய்களில் காணப்படும் பழுதுகள் ஆகியவற்றை சரி செய்திடும் பணியானது துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாநகரில் மாநகராட்சி அனுமதியின்றி விதிகளுக்கு முரணாக மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் ஏற்படக்கூடிய திடீர் அழுத்தத்தின் காரணமாக குடிநீர் குழாய்களில் நீர்கசிவு மற்றும் உடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் வெகுவாக பாதிக்கப்படுவது ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் கடுமையான கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கவும், மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீராக விநியோகம் செய்திட ஏதுவாக மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மாநகராட்சி குடிநீர் விநியோக உபவிதிகளுக்கு முரணாக குடிநீரினை மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் மோட்டார்களை பறிமுதல் செய்வதுடன் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, அபராதம் விதித்தல் மற்றும் இந்திய குற்றவியல் சட்டம் 378 மற்றும் 188 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. 
 
மேற்படி குடிநீர் இணைப்புகளில் மோட்டார்கள் பொருத்தி உறிஞ்சுவதை கண்டறிவதற்கான ஆய்வு பணியானது வரும் 11ம் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது என ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர். ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிApr 7, 2018 - 12:39:57 PM | Posted IP 141.1*****

மக்கள் பிரதிநிதிகள் சரியான நேரத்தில் தேர்வு செய்யப்படாததால் இது போன்று அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை காட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.

PonrajApr 6, 2018 - 10:10:23 AM | Posted IP 141.1*****

சாமுவேல் சொல்லுவது சரியான கர்த்தது

SamuelApr 4, 2018 - 10:32:37 PM | Posted IP 162.1*****

மழையே இல்லாமல் போன 2017 ல் கூட இந்த பிரச்சனை வரலை. ஒகி புயலால் நல்ல மழை பெயது பாபநாசத்தில் 130 அடிக்கு மேல் இருந்த நீரையெல்லாம் திட்டமிடாமல் வீணாக்கியாச்சி. தன்னாலே தண்ணீர் வந்தால் ஏன் மோட்டார் வைக்கனும். தன்னாலே தண்ணீர் வரும் படி மாநகராட்சி ஆணையர் முதலில் நடவடிக்கைகள் எடுக்கட்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals

New Shape Tailors




Thoothukudi Business Directory