» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூப்பர்மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முயற்சி : துாத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 13, மார்ச் 2018 8:50:31 PM (IST)தூத்துக்குடி விஇ ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்கெட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய  சொத்துவரி நிலுவையாக உள்ள கட்டிடங்களுக்கு சீல்! வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.இந்நிலையில் மாநகராட்சி சட்ட விதிகள் மற்றும் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்திரவின் அடிப்படையில் 20.02.2018 தேதி வரை நிலுவையில் உள்ள வணிக நிறுவனத்தின் நிலுவை தொகையினை 07.03.2018க்குள் செலுத்த தவறினால் வணிக நிறுவனத்தின் சொத்துக்களை கையகப்படுத்தவும், பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்  என  மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி விஇ ரோட்டில் செயல்பட்டு வரும் ராணி சூப்பர் மர்க்கெட் கடந்த 3 வருடங்களாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கித்தொகை ரூபாய் ஒன்றரை லட்சத்தை செலுத்தாமல் நீதிமன்றத்தில் அதிகபடியான தொகையை மாநகராட்சி விதித்திருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய தொகையில் பாதி பணத்தை கட்டிவிட்டு மேல்முறையீடு செய்ய நீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று பணத்தை வசூல் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீஸ் துணையுடன் கடைக்கு சென்று சீல் வைக்கப் போவதாக கூறியதால் பதற்றம் ஏற்ப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர், 

இதைத்தொடர்ந்து வியாபார சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி செலுத்த வேண்டிய வரித்தொகையில் பாதித்தொகையான ரூபாய் 75 ஆயிரத்தை கட்ட ஒப்புக்கொண்டதை தொடர்ந்து சீல் வைக்கும் நடவடிக்கை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


மக்கள் கருத்து

நியாஸ்Mar 15, 2018 - 12:29:52 PM | Posted IP 122.1*****

அருமையான கருத்துகள் நண்பன் அண்ட் கச

NanbanMar 14, 2018 - 04:41:47 AM | Posted IP 41.15*****

அநியாயமாக வரி வசூல் நடை பெறுகிறது.வீட்டு வரி மற்றும் சொத்து வரி எல்லாமே மிகவும் அதிகம்.கிடைக்கும் வருமானத்தில் எல்லா காண்ட்ராக்ட் வேலையில் காண்ட்ராக்ட் முதலாளிகளிடம் கமிஷன் மற்றும் லஞ்சம்.

கசMar 13, 2018 - 10:10:20 PM | Posted IP 27.62*****

ஏற்கனவே வரி செலுத்துபவரிடம் வசூல் செய்வதில் காட்டும் அக்கறையை புதிய கட்டிடத்திற்காக கட்டிட உரிமை கட்டணம் மற்றும் அதற்கு தற்போது விதிக்கப்படும் காலிமனை தீர்வை ஆகியவை கட்ட தயாராக இருக்கும் கட்டட உரிமையாளரிடம் பல்வேறுகாரணம் கூறி கட்டிட உரிமம் வழங்க காலம் தாழ்த்துவதால் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மற்றும் இத்துறையான மாநகராட்சிக்கும் பெரும் பொருள் இழப்பும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் நாட்டிற்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. பொதுமக்களும் வியாபாரிகளும் தொழில் நிருவனத்தினராம் கடன் பெற்று கட்டிடம் கட்டும் முயற்சியில் ஈடுபடும் பொது மாநகராட்சியின் சிறு காரணகளால் பண முடக்கம் ஏற்பட்டு கடனாளி ஆகிறார்கள் மேலும் பொதுமக்களின் சொந்த வீட்டு கனவு நிறைவேறாமல் போகிறது ஆகவே மாநகராட்சி ஆணையர் அவ்ர்கள் தயவு செய்து இந்த விவகாரத்தில் தாங்கள் நல்ல முடிவு எடுத்து தூத்துக்குடி மாநகராட்சி மக்களையும் வியாபாரிகளையும் தொழில் நிறுவங்களையும் காக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
CSC Computer Education


New Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory