» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்ச்சரிக்கை கூண்டு ஏற்றம்

செவ்வாய் 13, மார்ச் 2018 4:47:08 PM (IST)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடலில் கடந்த வெள்ளிக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலைகொண்டுள்ளது. இது லட்சத்தீவை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், கடலில் காற்றின் வேகம் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால் தென் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, மீனவர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

New Shape Tailors

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD







Thoothukudi Business Directory