» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி மிரட்டியதால் தற்கொலை செய்யபோவதாக கடிதம் எழுதி விட்டு மாயமான வாலிபர்: போலீஸ் விசாரணை!!

செவ்வாய் 13, மார்ச் 2018 12:48:17 PM (IST)

மனைவி மிரட்டியதால் தற்கொலை செய்யபோவதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பால் பாண்டி. இவரது மனைவி இன்பவள்ளி. இவர் ஸ்ரீவைகுண்டம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது 2-வது மகன் மேகராஜுக்கு (36) திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம். 

தற்போது மேகராஜ் என்னுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10--ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை மீட்டு தரவேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் மேகராஜ் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது மனைவி அடிக்கடி என்னுடன் தகராறு செய்து வந்தார். எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் என்னால் வேலைக்கு செல்ல முடியாததையடுத்து மனைவி மற்றும் மாமனார், அவரது குடும்பத்தினர் என்னை அவதூறாக பேசினர்.

மேலும் எனது மனைவி என் மீது வரதட்சணை புகார் செய்வேன் என மிரட்டினார். இதனால் நான் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து மேகராஜ் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரது கதி என்ன? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


Joseph Marketing

New Shape Tailors





Thoothukudi Business Directory