» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மேற்கு வங்க வாலிபர் மர்ம சாவு: போலீசார் விசாரணை

செவ்வாய் 13, மார்ச் 2018 10:47:12 AM (IST)

தூத்துக்குடியில் புதிய தாலூகா அலவலக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் இரவு பகலுமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில், ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில்  வட மாநில வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு இறந்துகிடந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
போலீசாரின் முதற்க்கட்ட விசாரனையில், அங்கு இறந்து கிடந்தவர் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த ராம் ஹென்ஸ்டா மகன் பாபென் எனத் தெரியவந்தது. 25 வயதான இவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடப்பணிகள் நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது அவரது மரணத்திற்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா? என மத்தியபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing

New Shape Tailors



Thoothukudi Business Directory