» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சரக்குபெட்டகம் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

திங்கள் 12, மார்ச் 2018 5:20:51 PM (IST)தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம்  ஒரே நாளில்  6,43,720 டிஇயு சரக்கு பெட்டகங்கள் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னிந்தியாவின் பொருளாதார இயந்திரமாக செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 07.03.2018 அன்று 6,43,720 டிஇயு சரக்குபெட்டகங்கள் கையாண்டு கடந்த நிதியாண்டில் கையாண்ட அளவான 6,42,103 டிஇயு சரக்குபெட்டகங்களைவிட அதிகமாக கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இச்சாதனையானது இந்த நிதியாண்டில் 24 நாட்களுக்கு முன்பதாகவே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய பெருதுறைமுகங்களுள் நான்காவது பெரிய சரக்குபெட்டகங்களை கையாளும் துறைமுகமான வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 11.03.2018 வரை 6,52,168 டிஇயு சரக்குபெட்டகங்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்குபெட்டகங்களை ஒப்பிடுகையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 8.63 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பி.எஸ்.ஏ. சிக்கால் சரக்குபெட்டக முனையம் மற்றும் தக்ஷின் பாரத் கேட் வே சரக்கு பெட்டக முனையம் ஆகிய இரண்டு சரக்குபெட்டகமுனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரண்டு சரக்குபெட்டகங்களின் கையாளும் திறன் 1.17 மில்லியன் டிஇயு ஆகும். இந்திய துறைமுகங்களில், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு சரக்குபெட்டகங்கள் பரிமாற்றம் செய்வதற்கு குறைந்த நேரம் எடுத்து கொள்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

பருத்தி நூல், கைத்தறி, இயந்திரங்கள், கடல் உணவுகள் மற்றும்  காகிதம் ஆகிய  சரக்குகள் ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருத்தி நூல், உலோக ஸ்கிராப், காகித கழிவு மற்றும் ரசாயனம் ஆகிய சரக்குகள் ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு மிக அருகாயமையில் ஒரு உள்நாட்டு சரக்குபெட்டக முனையம் மற்றும் 14 சரக்குபெட்டக நிலையங்கள் அமைந்திருப்பது, சரக்குபெட்டகங்களை துறைமுகத்திற்கு உள்ளாகவும் மற்றும் வெளியே எளிதாக எடுத்து செல்லும் வகையில் அமைந்திருப்பது மற்றொரு சிறபம்சமாகும்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர்  ஐ. ஜெயகுமார், இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் பாராட்டியதுடன், இனி வருங்காலங்களில் இது போன்ற பல சாதனைகளைப் தொடர்ந்து புரிய கேட்டுக் கொண்டார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticalsJoseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Thoothukudi Business Directory