» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடை காலத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கட் : ஆட்சியர் என்.வெங்கடேஷ் பேட்டி

திங்கள் 12, மார்ச் 2018 4:56:32 PM (IST)

கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டால், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார். 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் என்.வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 1,37,808 குழந்தைகளுக்கு சொட்டு மருத்து அளிக்கப்பட்டுள்ளது. நாளை வரை வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். 

கோடைகாலம் துவங்கி உள்ளதால் பாபநாசம் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர், மருதூர் மேலகால் கீழகால், அணையில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. 

தொழிற்சாலைகளுக்கு 20 எம்எல்டி தண்ணீர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது 10 எம்எல்டி மட்டுமே வழங்கப்படுகிறது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டால், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும். ஆலந்தலை கிராமத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் முதல்கட்ட ஆய்வுப்பணிகள் முடிந்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இங்கு நன்னீர் உற்பத்திக்கு அதிக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால், அடுத்தக்கட்டப் பணிகள் துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விரைவில் பணிகள் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் வளரச்சிப் பணிகளில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இரட்டை ரயில்பாதை, 4வழிச் சாலை, 6வழிச்சாலை, போன்ற திட்டங்கள் வேகமாக நடந்து வருகிறது. கடம்பூர் முதல் எப்போதும்வென்றான் வரையிலா சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்ற சாத்தியம் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த சாலையையும் 4 வழிச்சாலையாக மாற்ற ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்பட்டுள்ளது. தூத்துக்குடி - மதுரை இடையே 6 வழிச் சாலை அமைப்பது தொடர்பாக முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. கோவில்பட்டி, கயத்தாறு, எப்போதும் வென்றான், கடம்பூர் பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals
Thoothukudi Business Directory