» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளியில் துப்பாக்கிச் சூடு? தூத்துக்குடியில் பரபரப்பு

வெள்ளி 9, மார்ச் 2018 5:49:16 PM (IST)



தூத்துக்குடி பள்ளியில் திடீரென துப்பாக்கி குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மற்றும் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான வினாத் தாள்கள்  சி.வ. மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்புடன் வைக்கப்ட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலரான ஆனந்த கிருஷ்ணன் என்பவரின் துப்பாக்கியில் இருந்து திடீரென குண்டு வெடித்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தினை எஸ்பி மகேந்திரன், ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். துப்பாக்கி சூடு தொடர்பாக காவலர் ஆனந்த கிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து துப்பாக்கியை துடைக்கும் போது கைவிரல் பட்டு ஒரு குண்டு மட்டும் வெடித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யார் மீது குண்டு படாமல், வானத்தை நோக்கி பாய்ந்துள்ளது. பள்ளியில் திடீரென துப்பாக்கி குண்டு வெடித்துள்ளது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் மத்தியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

CSC Computer Education


Joseph Marketing


New Shape Tailors


Anbu Communications



Thoothukudi Business Directory