» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுகள்: மார்ச் 2ம் தேதி துவக்கம் - ஆட்சியர் தகவல்

புதன் 28, பிப்ரவரி 2018 5:05:33 PM (IST)

தூத்துக்குடி துறைமுகம் மற்றும் மணப்பாடு கடற்கரையில்  வான், கடல், நில சாகச விளையாட்டுகள் மார்ச் 2 முதல் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கோயம்புத்தூரிலுள்ள வான் விளையாட்டு அறிவியில் மையம் - பாரா சைலிங், பாரா கிளைடிங் Gang Gliding, பவர் ஹேங் கிளைடிங், போன்ற வான் சாகச விளையாட்டுகளை நடத்தி வருகிறது. அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கோயம்புத்தூரிலுள்ள வான் விளையாட்டு அறிவியில் மையம் கலந்து கொண்டு இவ்விளையாட்டின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் இந்நிகழ்ச்சிகளை வரும் மார்ச் 2 முதல் 4 வரையிலான மூன்று நாட்கள் விளையாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக Para Sailing, Aqua Sailing, Zorbing, Commando Net, River Crossing ஆகிய விளையாட்டுக்கள் நடத்தப்பட உள்ளன. மேற்படி சாகச விளையாட்டுகள் ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. விளையாட்டுகளில் பங்கேற்கவும், பார்வையிடவும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பங்கேற்று சாகச விளையாட்டுகளை முழு பாதுகாப்புடன் விளையாடலாம். மருத்துவ வசதி மற்றும் மீட்பு படையினர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுக கடற்கரை மற்றும் மணப்பாடு கடற்கரை ஆகிய இரண்டு இடங்களிலும் விளையாட்டுகள் காலை 8 மணிக்கு துவங்கி 11 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு மீண்டும் துவங்கி 6.30 மணி வரையிலும் நடைபெறும். மகளிர் திட்டம், மீன் வளத்துறை மற்றும் ஆவின் ஆகிய துறைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான சிற்றுண்டி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் நாள் 02.03.2018 அன்று காலை 8.00 மணிக்கு சாகச விளையாட்டுகளின் துவக்க விழா நிகழ்வு நடைபெற உள்ளது. மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டுகளை துவக்கி வைப்பார்கள். பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி சாகச விளையாட்டுகளில் பங்கேற்கவும், கண்டு களிக்கவும்; அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors




Thoothukudi Business Directory