» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை: பைக்கை மாற்றி எடுத்த தகராறில் பயங்கரம்

ஞாயிறு 25, பிப்ரவரி 2018 10:00:36 AM (IST)

தூத்துக்குடியில் பைக்கை மாற்றி எடுத்ததால் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி காதர் மீரான் நகரைச் சேர்ந்தவர் எட்வின் மகன்  செல்வின் (42), எலக்ட்ரீசியன். இவர் தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவில், ரயில்வே கேட் அருகே உள்ள எலக்ட்ரிகல் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு அப்பகுதியில் உள்ள அவரது நண்பர் கணேசன் என்பவரின் நைட் கிளப் கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கை எடுத்துள்ளார். அப்போது அவரது மோட்டார் பைக்கை எடுப்பதற்குப் பதில், தவறுதலாக வேறு ஒருவரின் பைக்கை சாவி போட்டு திறக்க முயன்றுள்ளார். 

இந்நிலையில் அங்கு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 2பேர் ஓடி வந்து, எங்கள் பைக்கை திருடிச் செல்ல பார்க்கிறாயா என்று கேட்டு அவரிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து செல்வினை தாக்கி கீழே விட்டனர். இதில் நிலைகுலைந்து அங்கு கிடந்த கல்மீது விழுந்த செல்வினின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து  ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

தொடர்ந்து செல்வின் உடல் பிரதே பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இது தொடர்பாக, தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து,  அண்ணா நகர் 4வது தெரு சிவகுமார், பொன்குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். பைக்கை மாற்றி எடுத்ததால் ஏற்பட்ட தகராறில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

ஒருவன்Feb 26, 2018 - 08:33:29 AM | Posted IP 180.9*****

ஏண்டா , தப்பு பண்ணுபவர்களை போலீசில் பிடித்து கொடுக்கலாம், இப்படி எல்லாம் கொலை பண்ணும் கலாசாரம் எங்கு இருந்து வந்தது ?? , இது ஆப்பிரிக்கா நைஜீரிய நாடு அல்ல, தமிழ் நாடு .. திருந்துங்கடா .. அல்லது ஒழுங்கா தண்டனை கொடுங்கடா ..

MAHESFeb 25, 2018 - 10:43:31 AM | Posted IP 117.2*****

எங்க ஏரியா தான் அவரு நல்ல குணம் நல்ல பேமிலி தெரியாம பண்ணின அதுக்கு அடிச்ச கொல்றது கொஞ்ச கூட ஈவு இரக்கம் இல்லாம இப்படியா பண்றது இந்த கொலையை பண்ணினவுக கண்டிப்பா அதிகபச்ச தண்டனைய தான் கிடைக்கணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals
New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing
Thoothukudi Business Directory