» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூரிய சக்தி பயன்பாடுகள் பற்றிய பயிற்சிப் பட்டறை : தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்தது!!

சனி 24, பிப்ரவரி 2018 3:47:17 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், இயற்பியல் துறை சார்பில் சூரிய சக்தியின் பயன்பாடுகள் பற்றிய ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

இந்த பயிற்சிப் பட்டறையை, கல்லூரி முதல்வர்  து.நாகராஜன் துவக்கி வைத்து சிறப்புறையாற்றினார். விருதுநகர் VHNSN கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர்   ஜெயக்குமரன், மதுரை தியாகராஜர் கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர்  ராஜா கார்த்திகன் ஆகியோர் இதன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாற்று எரிசக்தியின் முக்கியத்துவத்தையும், அதன் பயன்பாடுகள் பற்றி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கலந்துரையாடினர். 

இந்தப் பயிற்சிப் பட்டறையின் ஒரு பகுதியாக, சூரியசக்தியின் பயன்பாடுகள் பற்றிய செய்முறை வகுப்புகள் இராஜபாளையம், "CM சோலாரின்” உரிமையாளர் முத்துக்குமார் மாணவர்கள் பயனுறும் வகையில் நடத்தினார். இயற்பியல் துறை பேராசிரியர் கோ.நாரயணசாமி வாழ்த்துரை வழங்கினார். மாணவிகள் ஜெபா ரஞ்சனி மற்றும் கல்கி பவித்ரா தொகுத்து வழங்கினர். முன்னதாக மாணவி சங்கீதா வரவேற்புரை வழங்கினார். நிறைவாக மாணவன் சிவஹரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறைப் பேராசிரியைகள் ஜெ.பூங்கொடி, சே.ஹெலன் புளோரா, ச.கனக பிரபா மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மதன கோபால், தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




crescentopticals


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors




Thoothukudi Business Directory