» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மீன்வளத் திருவிழா: வ.உ.சி. கல்லூரி சுழற்கோப்பையை வென்றது

சனி 24, பிப்ரவரி 2018 3:21:45 PM (IST)தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான "மீன்வளத் திருவிழா” இக்கல்லூரியின் இலக்கியத் துறை மாணவர் சங்கத்தால் நடத்தப்பட்டது. 

கலைவிழாவில் தனிநபர் பாடல், ஓவியப்போட்டி, கோலப்போட்டி, விளம்பர யுக்தியை கையாளுதல், தனிநபர் நடனம், குழு நடனம், பேச்சுப்போட்டி, டப்ஸ்மாஸ், தனித்திறமை வெளிப்படுத்துதல், காகித ஆடை மற்றும் கழிவிலிருந்து கலை உருவாக்குதல், போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 15 கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 300 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல் இடம் பிடித்து சுழற்கோப்பையை வென்றது. திருநெல்வேலி எம்.டி.டி. இந்து கல்லூரி 2வது பரிசிற்கான கேடயத்தையும் வென்றது. 

நிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரியின் முதல்வர் கோ. சுகுமார் தலைமையுரை ஆற்றினார். தரணி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் சா.ஆதித்தன், வரவேற்புரை ஆற்றினார். மாணவர் சங்க இலக்கிய அணி செயலாளர் செல்வி ஹ.பெனாசிர் இவ்விழாவினை ஒருங்கிணைத்து, நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் திரளாக பங்குகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Anbu CommunicationsNalam Pasumaiyagam

New Shape Tailors

Black Forest Cakes

Joseph MarketingThoothukudi Business Directory