» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி பகுதி கோயில்களில் மகாசிவராத்திரி

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 8:44:56 PM (IST)



மகாசிவராத்திரி விழாவையொட்டி உடன்குடி,குலசேகரன்பட்டினம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.மெஞ்ஞானபுரத்தில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

இதையொட்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில், சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்,அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயில்,உடன்குடி அருள்மிகு கண்டுகொண்ட விநாயகர் திருக்கோயில்,செட்டியாபத்து சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இரவு முழுவதும் நடை திறந்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள்,நான்கு கால பூஜைகள்,பன்னிருதிருமுறைகள்,அகண்ட நாம பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம் ஆருகே நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயில் மகா சிவராத்திரி விழாவையொட்டி 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.மெஞ்ஞானபுரம் பஜாரில் பால்குட ஊர்வலத்தை அய்யா வழிப்பாடகர் சிறிகுரு சிவச்சந்திரன்,சப் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே கோயிலை அடைந்தவுடன் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. 

இதில்,இந்து முன்னணி மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலர் சக்திவேல்,பாஜக மாவட்ட விவசாய ஆணி செயலர் செந்தூர்பாண்டி, பாஜக மாவட்ட அணி நிர்வாகிகள் பரமசிவன், சேர்மத்துரை, ராமச்சந்திரன், திருச்செந்தூர் காந்தி காய்கனி மார்க்கட் சங்க தலைவர் திருப்பதி உட்பட நூற்றுக்கணக்கானோர் பால்குட ஊர்வலத்தில் பங்கேற்றனர். விழாவை யொட்டி மந்திர ஜெப வேள்வியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நமசிவாய மந்திரம் எழுதிய இசக்கி அம்மாள் என்ற சிறுமிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

ஆப்Feb 13, 2018 - 09:08:27 PM | Posted IP 122.1*****

ஹலோ டூட்டி ஆன்லைன் ஸ்டெரிலைட் போராட்டம் பற்றி செய்தியை காணோம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors


crescentopticals



Thoothukudi Business Directory