» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி சிப்காட் விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு : பெண்கள் உள்ளிட்ட 257 பேர் கைது

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 1:42:08 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில்ஸ்டெர்லைட் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு அரசு இடம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நேற்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவிடி சிக்னல் அருகே தொடங்கிய இப்போராட்டம், எம்ஜிஆர் பூங்காவில் இரவு முழுவதும் தொடர்ந்தது. 

இந்நிலையில், கீதாஜீவன் எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போராட்டம் நடத்தியவர்களுடன் துாத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், கலைந்து செல்ல மறுத்ததால் 43 சிறுவர் சிறுமியர் ,142 பெண்கள் உட்பட 257 பேரை போலீசார் செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

சில அரசியல் கட்சியினர், தொழிற்சாலைகளிடம் இருந்து நன்கொடை கிடைக்காததால் போராட்டத்தை தூண்டி விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து ள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாநில முக்கியப்பிரமுகரின் மகனும், தென் தமிழகத்தை சேர்ந்த ஒரு தொழிலபதிரும்,ஆளும்கட்சி எம்எல்ஏ ஆகிய மூவரும் கோவில்பட்டியில் தொழற்சாலைக்கு எதிராக கூட்டம் போட்டு போராட்டத்தை தூண்டி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து

மாயா குமார்Feb 14, 2018 - 12:02:15 PM | Posted IP 103.3*****

எதுவாக இருந்தாலும் தூத்துக்குடிக்கு நிலத்து அடி நீர் வேணும் ஆகையால் பொது மக்கள் நிலைமை கருத்தில் கொண்டு இனிவரும் காலம் நீர் மிகை காலமாக அமைய உதவுங்கள் , அரசு , அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் அரசியல் வாதிகள் சிந்தித்து செயல் படுங்கள் தயவூ செய்து . இந்த அமைப்புகளை செயல் படுத்தும் நீங்களும் மக்கள் தான் அதனால் உங்களுக்கும் நீர் ஆதாயம் நிச்சயம் . நிற்க இந்த குறுந்செய்தி சிந்திக்கும் செய்தி ,,,,...

FERVINFeb 14, 2018 - 10:08:48 AM | Posted IP 223.1*****

அட முட்டாள்களா NT PL போன்ற அனல் மின் நிலையத்தை போய் மூடச் சொல் டா, V.V. டைட்டான்யத்தை மூடச் சொல்லுடா,SP 1 C கம்பெனியமூடச் சொல்லுடா, டூட்டில செய்தி வந்துருக்கு நல்லா கண்ணை தொறந்து பாரூடா .....

LakshmananFeb 14, 2018 - 10:04:36 AM | Posted IP 123.6*****

Tutyonline.......remba nallavan......

TamilFeb 13, 2018 - 09:36:22 PM | Posted IP 157.5*****

News Media neenga ora madhiri irukinga eppadi

arunFeb 13, 2018 - 08:40:52 PM | Posted IP 27.62*****

கார்ப்பரேட் தான் நாட்டை ஆளுகிறார்கள் ,,இவர்களை சிறு மக்கள் கூட்டத்தால் ஏதும் செய்ய முடியாது ,,மக்கள் ஒருங்கிணையத்தவரை வெற்றி பெற முடியாது ...ஆட்சியாளர்கள் என்றும் கார்ப்பரேட் சேவகர்கள் ...மக்களை நலன் ஏதும் இருக்காது ,,ஊடகங்களும் இவர்களுக்கு நண்பன்

மக்கள்Feb 13, 2018 - 07:33:37 PM | Posted IP 157.5*****

உங்க பத்திரிகைல sterlite விளம்பரத்தை பாத்திருக்கேன்.அப்புறம் எப்படி. நீங்க அவனுக்கு ஆதரவாக தன இருப்பிங்க

GaneshanFeb 13, 2018 - 04:00:00 PM | Posted IP 27.62*****

சரியாக சொன்னீர்கள். அரசியல்வாதிகள் கேட்ட பனத்தை கொடுக்கவில்லை என்றால் திடீர்னு கலெக்டர பார்த்து மனு போகுது. ஊருல கீதாஜீவன் மட்டும் தான் தோடு போடுது. இந்த 6ணல் மாபியாக்களுக்கு வருமானம் இல்லாததால் ஒவ்வொரு கம்பெனிக்காக போய் கவரு கேட்கானுங்க.

நண்பன்Feb 13, 2018 - 03:57:08 PM | Posted IP 61.2.*****

தலைப்பை மாற்றி போட எவ்வளவு பணம் வாங்கினீங்க Tutyonline.

Arun TuticorinFeb 13, 2018 - 03:38:45 PM | Posted IP 182.7*****

all media's too bad

raamFeb 13, 2018 - 03:26:28 PM | Posted IP 59.96*****

உண்மை

சமூக நலவாதி..Feb 13, 2018 - 03:09:23 PM | Posted IP 122.1*****

இதை உங்களால் நிரூபிக்க முடியுமா???? அவன் போட்ட ரொட்டி துண்டுக்கு வாலாட்டுற ஆட்கள் நாங்க இல்லை....காசுக்கு போராடுற எவனும் தங்கள் பெற்ற குழந்தைகளை கடும் பணியிலும், சுடும் வெயிலிலும் கஷ்ட பட விட மாட்டான்...நீங்கள் ஆதரிக்க வில்லை என்றாலும் பரவா இல்லை... தயவு செய்து இந்த பிஞ்சு குழந்தைகளின் தியாகத்தை கொச்சை படுத்தாதீர்கள்...

vijayFeb 13, 2018 - 03:02:51 PM | Posted IP 122.1*****

பாஸ் நீங்க எவ்வளவு வாங்கினீங்க , தலைப்பு வேறமாதிரி இருக்கு

makkalFeb 13, 2018 - 02:20:06 PM | Posted IP 182.7*****

உண்மையான நியூஸ் மட்டும் போடவும்.நேத்து போராட்டம் பண்ணும் போது நியூஸ் ஒன்னும் போடல. இன்றைக்கு கைது ஆனதும் நியூஸ் போடுறிங்களா ### நல்லா வருவீங்க டா###

குமரெட்டியாபுரம் ஊர்க்காரன்Feb 13, 2018 - 02:01:27 PM | Posted IP 157.5*****

ஸ்டெர்லைட் செய்தியை போடுங்கள்..

சமூக நலவாதி...Feb 13, 2018 - 02:00:40 PM | Posted IP 122.1*****

ஸ்டெர்லைட் நிறுவனம் என்று பெயரைக்கூட சொல்ல முடியாத நீங்க தான் மக்கள் நண்பர்களா???? இதுதான் உங்க ஊடக தர்மமா?????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Joseph Marketing

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes

Thoothukudi Business Directory