» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தைப்பூச விழாவிற்கு விடுமுறை அளிக்காதது ஏன்? சீமான் கேள்வி

திங்கள் 12, பிப்ரவரி 2018 3:06:21 PM (IST)விநாயகர், மகாவீர் ஜெயந்தி விழாக்களுக்கு விடுமுறை அளிப்பது போல் முருகப்பெருமானின் தைப்பூச விழாவிற்கு விடுமுறை அளிக்காதது ஏன்? என திருச்செந்தூரில் நடந்த திருமுருக பெருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் திருமுருகப்பெருவிழா தேரடி திடலில் நடந்தது. வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கலையரசன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் நாதா சேகுவாரா முன்னிலை வகித்தார். திருமுருகப் பெருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கணைப்பாளர் சீமான் பேசியதாவது: பா.ஜ.க, வேறு. ஆர்.எஸ்.எஸ். வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். அது போல நாம் தமிழர் வேறு. வீரத்தமிழர் முன்னணி வேறு அல்ல. 50 ஆயிம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி நம் தமிழர் மொழி. எல்லா மொழி சொல்லுக்கும் விளக்கும் அளிக்கும் ஒரே மொழி தமிழ் மொழி. தமிழன் என்று சொல்வதில் நாம் பெருமை கொள்வோம். நாம் இந்துக்கள் அல்ல. 

இந்து மதத்தையும், இந்தியா என்ற பெயரையும் உருவாக்கியது வெள்ளைக்காரன். மிளகு வணிகத்திற்காக இங்கு வந்த வெள்ளைக்காரன் நம்து பிரிந்த கிடந்த பகுதிகளை இணைந்து இந்தியா என்று பெயரிட்டு அழைத்தார்கள். அவன்தான் இந்து சொல்லையும் உருவாக்கினான். இந்த என்ற சொல் மதமல்ல. நம்முடைய மதம் வீரசைவம் மற்றும் வீரவைணவம் தான். இடையில் வந்த ஆரியர்கள் தான் நம்மை சாதியின் பெயரளலும், மதத்தின் பெயராலும் பிரிந்து நம்மை அடிமையாக்கினார்கள். வீரத்திற்கு பெயர் போனவர்கள் தமிழர்கள். மூதாதையர்களை வழிப்படுவது நமது மரபு. தீரன் சின்னமலை, வேலுநாச்சியார், பூலி தேவன் உள்ளி வீரதமிழர்களை போற்ற வேண்டும். குலதெய்வ வழிப்பாடு தான் தமிழர்களின் மரபு. 

குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை உள்ளிட்ட ஐந்தினைகளை குறிக்கும் வகையில் முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகிய வழிபாட்டு முறைகளை நாம் தொடர வேண்டும். தற்போது நடக்கும் திருமுருகபெருவிழா போல வருங்காலத்தில் முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகிய  தெய்வங்களுக்கு பெருவிழா எடுப்போம். இனி நம்முடைய மதம் எதுவென்று கேட்டால் வீரசைவன், வீரவைணவன் என்று கூறுங்கள். விநாயகர் விழா, குருநானக் விழா, மகாவீர் ஜெயந்தி விழா ஆகிய விழாக்களுக்கு விடுமுறை அளிப்பது போல் முப்பாட்டான் முருகப்பெருமானின் தைப்பூச திருவிழாவிற்கு விடுமுறை அளிக்காதது ஏன்?. 

தமிழர்களின் மரபு என்பது வீரம் நிறைந்தது. முந்தைய காலங்களில் போரிட செல்லும் தமிழர்களுக்கு வலி தெரியாமல் இருக்க தான் வேல் குத்தி வந்தார்கள்.  நமது எல்லைகளை காக்க தமிழர்கள் நிறுவியது தான் எல்லைக்கல். இதையும் வழிப்பாடு தமிழர்கள் நடத்தியள்ளனர். இதே போல் அடுத்து ஆண்டு நடக்கும் திருமுருகப்பெருவிழா இதைவிட பலமடங்கு விழாவாக கொண்டாடப்பட வேண்டும். தமிழர்களின் மரபுகளை மீட்டெடுத்து மீட்சியல் புரட்சி ஏற்படுத்த வேண்டும். மெய்பியல் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்போது இங்குள்ள அனைவரின் வீடுகளில் நமது கொடி பற க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகள் கழித்து நாம் தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்போம். இவ்வாறு சீமான் பேசினார்.

 நடிகர் மன்சூர்அலிகான் 

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் இணைந்த நடிகர் மன்சூர்அலிகான் பேசியதாவது: தமிழகம் மிகவும் மோசமான பேராபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அண்ணன் சீமான் வழியில் அனைவரும் நாம் செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஒரு நடிகருக்கு அரசியலில் வருவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி பேரம் பேசப்பட்டு முதற்கட்டமாக ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பழனியப்பா, ஞானபழனியப்பா பாடல் வரிகளை மாற்றி சீமானை புகழ்ந்து பாடினார்.கூட்டத்தில் நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, நடிகர் மன்சூர் அலிகான், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வைகுண்ட மாரி, திருச்செந்தூர் தொகுதி செயலாளர் மனோகரன், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்துரை, மண்டல செயலாளர் இசக்கிதுரை, மாவட்ட தலைவர் ஆல்பர்ட், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் திருவழகன், வக்கீல் அணி மாநில தலைவர் ரூபஸ், திருச்செந்தூர் சட்டமன்ற தலைவர் துரையரிமா, ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராம்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபர், திருச்செந்தூர் நகர செயலாளர் மணி, காயல்பட்டினம் நகர செயலாளர் முகைதீன் அப்துல்காதர் உட்பட பலர் பேசினர். முன்னதாக வீரத்தமிழர் முன்னணி சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


மக்கள் கருத்து

தமிழன்Feb 12, 2018 - 04:30:41 PM | Posted IP 157.5*****

திரு சைமன் அவர்களே முதலில் உங்கள் கட்சி காரங்களை தமிழில் பெயர் வைக்க சொல்லவும், அப்புறம் எம்பெருமான் முருகப்பெருமானை வழிபடச்சொல்லவும், நெற்றியில் விபூதி அணியச்சொல்லவும், முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழகு குத்தி காவடி எடுத்து பாதயாத்திரை செல்ல சொல்லவும், அப்புறமா நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் உண்மையாகவே தமிழுக்காகவும், தமிழனின் நலனுக்காகவும் குரல் கொடுக்கிறாய் என்று ....... உங்களின் போலி வேடம் வெகுநாள் நிலைக்காது சைமன் அவர்களே......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education


New Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory