» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செத்து கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள் : தூத்துக்குடி அருகே பரபரப்பு

திங்கள் 12, பிப்ரவரி 2018 12:27:11 PM (IST)



தூத்துக்குடி அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டு உள்ளது. இங்கு அவ்வப்போது கடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மீன்கள் கூட்டமாக கரை ஒதுங்குவது, சில நேரங்களில் இறந்து ஒதுங்குவது போன்ற நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் கடற்கரையோரங்களில் ஏராளமான தொழிற்சாலைகளும் அமைந்து உள்ளன. இதனாலும் மீன்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. 

அந்த பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன்கள் இறந்த நிலையில் கிடந்தன. சிறிய மீன்கள் முதல் சுமார் 2 அடி நீளம் கொண்ட மீன்கள் வரை கரை ஒதுங்கின. இந்த பகுதியில் அதிக அளவில் காணப்படக்கூடிய ஊளி, கீழி, மூஞ்சான், ஓரை, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிகமாக இறந்து கிடந்தன. இதனை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இங்குள்ள ஸ்பிக் தொழிற்சாலை கழிவு கடலில் கலப்பதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவித்தனர். கோவளம் கடற்கரையில் பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. இந்த பாறைகளுக்கு இடையே மூஞ்சான், கீழி உள்ளிட்ட மீன் இனங்கள் அதிக அளவில் காணப்படும். தற்போது அந்த மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருக்கின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors






Johnson's Engineers



Thoothukudi Business Directory