» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குரூப் 4 தேர்விற்கு வந்தபோது விபத்து: சிறுவன் பரிதாப சாவு - தாய் தந்தை, தம்பி படுகாயம்!!

திங்கள் 12, பிப்ரவரி 2018 11:00:08 AM (IST)



தூத்துக்குடி அருகே லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அவரது தாய், தந்தை உட்பட 3பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் எப்போதுவென்றான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(45).  இரும்பு வியாபாரி, இவரது மனைவி மனைவி விஜயலெட்சுமி(33). இந்த தம்பதியருக்கு பிரசன்னா(12), ஹரிபிரசாத்(2) என 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள தேர்வு மையத்தில் விஜயலெட்சுமி குரூப் 4 எழுத இருந்ததால், ராஜ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரே ஸ்கூட்டரில் எப்போதுவென்றானில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை அருகே வரும் பொழுது சாலையோரத்தில் நிறுத்தியிருந்த கண்டெய்னர் லாரி மீது ஸ்கூட்டர் மோதியது. 

மோதிய வேகத்தி்ல் நால்வருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, லாரியின் அடியில் மாட்டிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீசார் நால்வரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரசன்னா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மேல் சிகிச்சைக்காக ராஜ்குமார் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது மனைவி விஜயலெட்சுமி, மகன் ஹரிபிரசாத் தூத்துக்குடியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory