» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றுக்குள் விழுந்த வாலிபர் பரிதாப சாவு: தம்பி கண்முன்னே சோகம்

திங்கள் 12, பிப்ரவரி 2018 10:06:56 AM (IST)

தூத்துக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்தவர் மீது பம்பு செட் சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். தம்பியின் கண்முன்னே இந்த சோகம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்ற ஜெயபாலன். இவருடைய மகன் கவுதம் (19). ஐ.டி.ஐ. முடித்து உள்ள கவுதம், கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். 

நேற்று காலை கௌதம், அவ­ரது தம்பி சங்­க­ர­லிங்­கம் (15), சித்தி மகன் வன­ராஜ் (16) ஆகி­யோர் கிழக்கு சாமி கோயில் அருகே உள்ள ஒரு தனி­யார் தோட்­டத்­தில் தர்­பூ­சணி விதை விதைக்­கும் வேலைக்கு சென்­றுள்­ள­னர். வேலையை முடித்து விட்டு மதி­யம் அங்­குள்ள கிணற்­றில் உள்ள பம்ப் செட் மோட்­டா­ரில் கைகால் கழுவி கொண்­டி­ருந்­த­னர். அப்­போது எதிர்­பா­ர­த­வி­த­மாக மோட்­டார் பொருத்­தப்­பட்­டி­ருந்த சுவர் இடிந்து கிணற்­றுக்­குள் விழுந்­தது. அப்­போது அதன் அருகே நின்று கை, கால் கழு­விக் கொண்­டி­ருந்த கௌதம் மீது சுவர் விழுந்து அமுக்­கி­ய­தால் அவ­ரும் சேர்ந்து கிணற்­றிற்­குள் விழுந்தார். இதை பார்த்த அவ­ரது சகோ­த­ரர்­கள் வன­ராஜ், மற்­றும் சங்­க­ர­லிங்­கம் கௌதமை மேலே துாக்க முயற்சி செய்­துள்­ள­னர். 

அப்­போது திடீ­ரென மோட்­டார் ரூம் முழு­மை­யாக இடிந்து கிணற்­றிற்­குள் விழுந்­தது. இத­னால் அதிர்ச்சி அடைந்த அவ­ரது சகோ­த­ரர்­கள் ஊருக்­குள் ஓடிச்­சென்று உத­விக்கு ஆட்­களை அழைத்து வந்­த­னர். அதற்­குள் சுவ­ரு­டன் கிணற்­றின் அடி­யில் சிக்­கிக் கொண்ட கௌதம் மூச்சு திணறி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார். தம்பியின் கண்முன்னே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.கிணற்­றுக்­குள் சிக்கி கொண்ட கௌதமை மீட்க முடி­யா­த­தால் அங்­கி­ருந்­த­வர்­கள் சிப்காட் தீய­ணைப்பு நிலை­யத்­திற்கு தக­வல் தெரி­வித்­த­னர். அவர்­கள் விரைந்து வந்து கௌதம் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்­த­னர். இது­கு­றித்து போலீசார் வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


New Shape TailorsJoseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory