» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் தீ விபத்து : ரூ.2கோடி மதிப்பிலான தும்புகள் ஏறிந்து நாசம்
வியாழன் 8, பிப்ரவரி 2018 9:05:30 AM (IST)

தூத்துக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் தும்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கு வைத்திருந்த ரூ.2 கோடிக்கு மதிப்பிலான தும்புகள் ஏறிந்து சேதம் அடைந்தது.
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்குள்ள தனியார் தும்பு ஆலையில் உள்ள கிட்டங்கியில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அப்பகுதியில் புகைமண்டலமாக மாறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயனைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து தீயனைப்புத்துறை அதிகாரி நட்டார் ஆனந்தி தலைமையில் 5 வண்டிகளில் விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கு மேல் தீயை அனைக்க போராடி வருகின்றனர்.
ஆலையின் பக்கவாட்டு சுவர் உயரமாக இருந்ததால் சுவரை உடைத்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தும்பு ஆலையில் உள்ள தும்புகள் சுத்தம் செய்யப்பட்டு செங்கல்கள் வடிவில் வெட்டி தயார் செய்யப்பட்டு அதை பேக்கிங் செய்து இங்கிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பணியாளர்கள் யாரும் பணியில் இல்லை இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன் விபத்து: பெண் பலி.. 10பேர் படுகாயம் - திருப்புத்தூர் அருகே சோகம்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:39:07 AM (IST)

தமிழ்ச்செல்வன்Feb 8, 2018 - 12:54:01 PM | Posted IP 59.93*****