» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற பிப்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, பிப்ரவரி 2018 8:59:52 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்த உதவும் வகையில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள் ஆவர். இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்–2 மற்றும் பட்டயப்படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். 31–12–2012–க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற எழுத படிக்க தெரிந்து இருந்தால் மட்டும் போதுமானது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிவுற்றிருக்க வேண்டும். பயனாளிகள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. வகுப்பை சார்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடைய வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் வருகிற 23–ம் தேதிக்குள் நேரில் வந்து கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன் விபத்து: பெண் பலி.. 10பேர் படுகாயம் - திருப்புத்தூர் அருகே சோகம்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:39:07 AM (IST)
