» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாஸ்போர்ட் விசாரணைக்கு நவீனமுறை அறிமுகம்: காவலர்களுக்கு டேப் வழங்கினார் எஸ்பி மகேந்திரன்
புதன் 7, பிப்ரவரி 2018 3:27:11 PM (IST)

தூத்துக்குடியில் எம் பாஸ்போர்ட் திட்டத்தின் கீழ், காவல் நிலையங்களுக்கு கையடக்க கணினிகளை எஸ்பி மகேந்திரன் வழங்கினார்.
பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் முறையில் போலீஸ் விசாரணைக்கு ஆகும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் எம் - பாஸ்போர்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி காவல் நிலையங்களில் செயல்படும் நுண்ணறிவுப் பிரிவு (ஐஎஸ்) போலீசாருக்கு டேப் எனப்படும் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 49 காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயிற்சி பெற்ற காவலர்களுக்கு டேப்லட் கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன் வழங்கினார்.
அப்போது அவர் கூறியது: பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக நேரடியாக அந்தந்த காவல் நிலையத்துக்கு அனுப்பப்படும். அங்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கு சென்று உரிய விசாரணை நடத்தியும், டேப்லட் கருவியில் படம் பிடித்தும், உடனடியாக ஆன்லைன் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து உரிய விசாரணைக்குப் பிறகு பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய திட்டம் பிப்.9 (வெள்ளிக்கிழமை ) முதல் செயல்பட உள்ளதால் டேப்லட் பெற்ற காவலர்கள் காலதாமதம் இல்லாமல் விசாரணையை முடித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன் விபத்து: பெண் பலி.. 10பேர் படுகாயம் - திருப்புத்தூர் அருகே சோகம்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:39:07 AM (IST)
