» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 11ம் தேதி குரூப் 4 தேர்வு; 56,506பேர் எழுதுகிறார்கள் : ஆட்சியர் தகவல்

புதன் 7, பிப்ரவரி 2018 11:15:18 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 11ம் தேதி 187 தேர்வு மையங்களில் 56,506பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்.

இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி IV-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வுகள் 11.02.2018 அன்று முற்பகல் 10.00 முதல் 01.00 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வு இம்மாவட்டத்தில், தூத்துக்குடி, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய எட்டு வட்டங்களில் உள்ள மையங்களில் கீழ்கண்ட விபரப்படி மொத்தம் 56,506 விண்ணப்பதாரர்கள் இம்மாவட்டத்தில் தேர்வெழுத உள்ளனர்.

தூத்துக்குடியில் 72 தேர்வு மையங்களில் 21934பேரும், எட்டயபுரத்தில் 6 தேர்வு மையங்களில் 1812பேரும், கோவில்பட்டியில் 43 தேர்வு மையங்களில் 13145பேரும், ஓட்டப்பிடாரத்தில் 7 தேர்வு மையங்களில் 2180பேரும், சாத்தான்குளத்தில் 9 தேர்வு மையங்களில் 2941பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 11 தேர்வு மையங்களில் 3238பேரும், திருச்செந்தூரில் 25தேர்வு மையங்களில் 7479பேரும், விளாத்திகுளத்தில் 14 தேர்வு மையங்களில் 3777பேரும் என தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 187 தேர்வு மையங்களில் 56,506பேர் தேர்வெழுத உள்ளனர். 

இத்தேர்வு பணிக்கென  கண்காணிப்பு குழுக்களும் மற்றும் கண்காணிப்பு பணிக்கென துணை ஆட்சியர் நிலையில்   பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு உரிய நேரத்தில் தேர்வுக்கூடத்தில் ஆஜராகிட வேண்டும். தேர்வு தொடங்கி 30 நிமிடத்திற்கு மேல் வருகை தரும் விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். 

தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூடத்திற்கு பேஜர், செல்போன், கால்குலேட்டர், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Joseph Marketing

CSC Computer Education


New Shape Tailors

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory