» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் கொடிக்கம்பம் பிரச்சனைக்கு காரணம் என்ன ? : பரபரப்பு பின்னணி தகவல்கள்

சனி 13, ஜனவரி 2018 1:27:06 PM (IST)நாசரேத் கொடிக்கம்பம் பிரச்சனைக்கு காரணம் என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் நுழைவுவாயில் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்து முன்னணி கொடிக்கம்பம் புதிதாக அமைத்துள்ளனர். ஆனால், அந்த கொடிக்கம்பம் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாகக் கூறி நாசரேத்தைச் சேர்ந்த ராஜேஷ், மாணிக்கம், செல்வக்குமார், சாமுவேல், ராஜ், ஜெயபால், குட்டி ஆகியோர் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.எனவே இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. நாசேரத் ஞானராஜ் நகர் பகுதியில் கிறிஸ்தவ பிரமுகர் ஒருவர் போர் மூலம் தண்ணீர் எடுத்து அப்பகுதியில் விற்பனை செய்து வருகிறார்.இந்த தண்ணீர் விற்பனை குறித்து இந்து முன்னணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாெடரப்பட்டு நிலுவையில் உள்ளது.இதனால் கோபமடைந்த கிறிஸ்தவ பிரமுகரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தியதாலேயே பிரச்சனைக்கு காரணம் என சுற்றுவட்டார பகுதிகளில் கூறப்படுகிறது.மேலும் கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தியதை புகைப்படம் எடுத்த இந்து முன்னணியை சேர்ந்த அருணாசலம் என்பவரை அவர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாசரேத்தில் ஊர்வலத்திற்கு தடை, பரபரப்பு பதற்றம்இதற்கிடையே இன்று நாசரேத்தில் கிறிஸ்தவ கோவில் மணி அடிக்கப்பட்டு 300 பேர் திரண்டனர். தொடர்ந்து கொடிக்கம்ப சம்பவத்தை கண்டித்து ஊர்வலமாக சென்றனர்.சந்திபஜாரில் அவர்கள் சாத்தான்குளம் டிஎஸ்பி திபு தலைமையிலான போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.ஊர்வலமாக செல்ல அனுமதி கிடையாது என்றும் எனவே அமைதியாக கலைந்து செல்லா விட்டால் கைது செய்வோம் எனவும் போலீசார் ஊர்வலமாக வந்தவர்களிடம் எச்சரிக்கை விடுத்தனர்.பின்னர் ஊர்வலக்காரர்கள் கோவில்முன்பு 2 மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்துள்ளனர். இப்பிரச்சனையால் அதிரடிப்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளது.கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிஎஸ்பி ஆலோசனை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

ஜெகன்Jan 14, 2018 - 03:15:16 PM | Posted IP 178.1*****

அமைதி பூங்காவான இந்தியாவின் அமைதியை கெடுக்க இந்த முன்னணிகள் தீவிரமாக முயல்கின்றன. இந்த உண்மை புரியாமல் அவர்களோடு இணையும் இந்துக்கள் உம்மையே ஒருநாள் புரிந்துகொள்வர்.

தமிழன்Jan 14, 2018 - 11:21:54 AM | Posted IP 157.5*****

இவர்களுக்கு மற்றவர்களை அடிக்கும் உரிமையும், கொடிக்கம்பத்தை அகற்றும் உரிமையும் யார் கொடுத்தது. நம் நாட்டில்தான் பெரும்பான்மை சமுதாயம் பாதுகாப்புஇல்லாமல் வாழ்கிறது? ? காவல்துறையினர் இதுபோல் மத கலவரத்தை தூண்டும் விதத்தில் நடக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராகவேந்திராJan 13, 2018 - 09:20:38 PM | Posted IP 157.5*****

இதில் யார் மத கலவரத்தை தூண்டிகிறார்கள்

IndianJan 13, 2018 - 08:30:01 PM | Posted IP 61.3.*****

Is all the flag posts are having approval either from Police or Govt.? Who has given power to the people to remove the flag post?

punithanJan 13, 2018 - 03:01:43 PM | Posted IP 61.3.*****

RSS நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் . தயவு செய்து மத கலவரத்தை தூண்டவேண்டாம் . இந்தியா ஒரு மதசார்பட்ட நாடு .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals
Thoothukudi Business Directory