» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஹெல்மெட் போடாவிட்டால் போலீஸ் சம்மன் வீட்டுக்கு வரும் : எஸ்பி மகேந்திரன் எச்சரிக்கை!!

சனி 13, ஜனவரி 2018 12:15:37 PM (IST)ஹெல்மெட் போடாவிட்டால் போலீஸ் சம்மன் வீட்டுக்கு வரும் என்று மாவட்ட‌ எஸ்பி மகேந்திரன் .எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு வகைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 128 நபர்களும், இவ்வாண்டில் (2018) ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி, தலையில் ஏற்பட்ட காயத்தால் மட்டும் இதுவரை 9 நபர்களும் இறந்துள்ளனர். 

அதனால் அவர்களது குடும்பங்கள் கடுமையான இழப்பையும் வேதனையையும் சந்தித்துள்ளது. ஆகவே, இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில்,  மக்களின் நலன் கருதி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில், தினசரி 2ஆயிரம் வழக்குகள் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகரில் மட்டும் 142 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இருசக்கர வாகன தணிக்கையை மேம்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகரம் மற்றும் கோவில்பட்டியில் இயங்கி வரும் நவீன கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம், மோட்டார் வாகன சட்ட விதியை மீறுபவர்களை கண்டறிந்து, அவர்களது முகவரிக்கு தபால் மூலமாக சம்மன் அனுப்பி அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் மினிபஸ், உட்பட அனைத்து வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் காணும்பொங்கல் கொண்டாடும் இடங்களான 21 பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் எந்த பகுதியிலும், படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் இன்றி காணும் பொங்கல் கொண்டாட காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது, தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி (பொ) லிங்க திருமாறன், போக்குவரத்து ஆய்வாளர் சந்தனகுமார், உதவி ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உட்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

karuppanJan 16, 2018 - 08:18:36 PM | Posted IP 122.1*****

qualityroad plz..

செய்வீர்களாJan 16, 2018 - 01:53:54 PM | Posted IP 117.2*****

142 கேமெராக்கள் இருந்தும் இளைஞர்கள் பைக்-இல் மிக வேகமாக cut அடித்து செல்கிறார்கள். அவர்களை கேமரா பதிவை வைத்து பிடித்து தண்டனை கொடுப்பீர்களா?

Jai HindJan 14, 2018 - 06:40:38 PM | Posted IP 168.2*****

ஹெல்மெட் போட வேண்டாம் சாலை வீதிகளை சரியாக பயன்படுத்தினால் போதும் போஸ்க்க என்னும் தீருடனுக்கு பணம் குடுக்க திங்க மக்கலோ Jai Hind.......

RonsonJan 14, 2018 - 01:33:25 AM | Posted IP 27.62*****

First put quality roads, next don't don't beg for money and threaten public, remove dust, garbage, alongside road's, most important thing is make Walk way on both the sides of the road, remove the shopkeeper , grabbing the Walk way, which is the cause of road accidents, can u make tuticorin like Britain ,usa,or Japan,canada, never so stop taking bribe and catch the real criminal, culprits,and anti social elements

lakshmanJan 14, 2018 - 12:56:11 AM | Posted IP 106.2*****

1st road podunga

முத்துராஜ்Jan 13, 2018 - 09:55:33 PM | Posted IP 157.5*****

இலக்கு வைப்பதை பாா்த்தால் மக்கள் நலனாக தெரியவிலை வசூல் வேட்டை யாக தெரிகிறது.

CitizenJan 13, 2018 - 09:11:01 PM | Posted IP 42.11*****

தலைக்கவசம் அவசியம்... அதைவிட நாட்டில் அதிக தவறுகள் நடைபெறுகிறது.. இதே கவனத்தை மற்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதிலும் அரசு செயல்பட்டால் மக்களிடம் இருந்து ஒத்துழைப்பு அதிகமாக கிட்டும்

ஒருவன்Jan 13, 2018 - 08:35:46 PM | Posted IP 59.89*****

ஹெல்மெட் போட்டு ஓட்டுபவர் சில பேர் ரோடு சரி இல்லாத காரணத்தால் உயிரிழந்தவர்கள் அதிகம் .... உண்மையே ... தெரிந்து கொள்ளுங்கள் . பணம் பறிக்கும் வேலையை விட்டு விட்டு, முதல்ல ரோடு முக்கியம் , அதுல மணல் தேங்கி இருக்காமல் , பள்ளம் விழாமல் பார்த்து இருக்க வேண்டும் .. இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுபவர்கள் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் , ஒரு வேளை ஹெல்மெட் அணிந்து வேகமாக வண்டி ஓட்டுபவர்களும் , ஒரு வேளை நகை பறிப்பு திருடன் போலி நம்பர் பிலேட் மாட்டி ஒட்டி சென்றால் எப்படி முக அடையாளம் காண முடியும்?? மக்கள் நலனை ஆராய்ந்து செய்யுங்கள்....

A.GanesanJan 13, 2018 - 06:00:57 PM | Posted IP 171.4*****

SIR This is Good idea. I welcome But Sir Roads are very danger. First up all PL. recormends saft road. and then honest officers will check bike and others. And also very importent your officer must speake polite and lovely to the people.

அசோக்Jan 13, 2018 - 05:34:30 PM | Posted IP 117.2*****

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை சட்டம் தன் கடமையை செய்யட்டும்

வடிவேல்Jan 13, 2018 - 05:12:16 PM | Posted IP 106.2*****

ஊழல் லஞ்சம் சமூகவிரோதி இவங்களுக்கு கூட இவளவு பெரிய தண்டனை கிடையாது டா. ஒரு ஹெல்மட் போடலைனா இவளவு தண்டனையா. ஏன்டா இது சுதந்திர நாடா இல்லை சர்வாதிகா நாடா? வேலங்குவாண்ட தமிழனும் தமிழ் நாடும்.

ஒருவன்Jan 13, 2018 - 04:14:32 PM | Posted IP 61.2.*****

முதல்ல ரோட்டை சரிபண்ணுங்கடா

ஜெபசிங் இம்மானுவேல்Jan 13, 2018 - 03:48:25 PM | Posted IP 27.25*****

கார் என செய்ய போறீங்க சார்

SKSJan 13, 2018 - 03:37:05 PM | Posted IP 49.35*****

இந்த விதிமுறை அனைவருக்கும், காவல்துறைக்கும் உள்ளடக்கியதாகும்.....

SirvalJan 13, 2018 - 02:36:12 PM | Posted IP 117.2*****

அது எங்கள் உரிமை ..

கணேஷ்Jan 13, 2018 - 01:59:52 PM | Posted IP 117.2*****

நண்பா , அந்த செய்தி எல்லோருக்கும் தான் . நம் உயிரே காப்போம்

வடிவேல்Jan 13, 2018 - 12:22:35 PM | Posted IP 106.2*****

போலீஸ் ஹெல்மட் போடாமல் போனால் நடவடிக்கை எடுப்பீங்களா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


New Shape TailorsThoothukudi Business Directory