» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனைமரங்கள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் : ஆட்சியர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்தார்.

சனி 13, ஜனவரி 2018 10:31:02 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் 60,000 பனங்கொட்டைகள் ஊன்றும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு மாநிலத்தின் அடையாளமாக அறிவிக்கப்பட்ட பனைமரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்பட்டு வருவதாலும், பனைமரத்தின் மூலம் பதநீர், நுங்கு, கற்கண்டு, கருப்பட்டி, பனைவிசிறி மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கடந்த காலங்களில் மண் அரிப்பை தடுப்பதற்கும், மழைநீரை அதிக்கபடுத்துவதற்கும் பனைமரங்களை விவசாயிகள் அதிகளவு உற்பத்தி செய்து வந்துள்ளனர். 

மாவட்ட ஆட்சியரின்  சீரிய முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் 60,000 பனங்கொட்டைகள் ஊன்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் ஆலங்குளம் கண்மாய்,  வர்த்தகரெட்டிபட்டி ஊராட்சி, அரசன்குளம் கண்மாய் மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கீழவல்லநாடு ஊராட்சி முருகன்புரம் அருகில் இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் பனங்கொட்டைகள் ஊன்றும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் நேற்று துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர், தூத்துக்குடி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கி.ஊ / வ.ஊ)  ஆகியோர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், குளம்/கண்மாய் ஓரங்களில் முதற்கட்டமாக 7000 பனங்கொட்டைகள் ஊன்றப்பட்டது.


மக்கள் கருத்து

RajasekarJan 17, 2018 - 09:30:21 PM | Posted IP 122.1*****

வாழ்த்துக்கள் .......

ஒருவன்Jan 13, 2018 - 10:14:40 PM | Posted IP 59.89*****

போதாது.. இன்னும் நிறைய பனை மரங்கள் நடவ வேண்டும் ... வாழ்த்துக்கள்

பாலாJan 13, 2018 - 04:19:13 PM | Posted IP 59.89*****

வாழ்த்துக்கள்!

திருமலை குமார் , மாவடிப்பண்ணைJan 13, 2018 - 12:57:13 PM | Posted IP 83.11*****

நல்ல திட்டம். தற்போது பனையேறும் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நாளடைவில் முற்றிலும் இல்லாமல் கூட போகலாம். ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் பனையேறும் தொழிலாளிகளுக்கு முறையான பயிற்சியும், தேவையான கருவிகளும் மானிய விலையில் கொடுத்து பனையேறும் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்

தமிழன்Jan 13, 2018 - 10:44:41 AM | Posted IP 157.5*****

வாழ்த்துக்கள் ஆட்சியர் அவர்களே ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


crescentopticalsNew Shape TailorsThoothukudi Business Directory