» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மானிய விலையில் காய்கறி விதைகள் வினியோகம்: ஆட்சியர் வெங்கடேஷ் தகவல்

சனி 13, ஜனவரி 2018 8:55:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் காய்கறி விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக, ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;– தூத்துக்குடி மாவட்டத்தில், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள், ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்திட கிராம மற்றும் புறநகர் வீட்டு தோட்டங்களில் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, வீட்டு தோட்ட காய்கறி விதை பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்–அமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார்.

அதன்படி நடப்பாண்டு ரூ.20 மதிப்புள்ள உயர் விளைச்சல் தரும் கத்தரி, தக்காளி, பீர்க்கன் காய், மிளகாய், கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளில் ஏதேனும் 5 காய்கறி விதைகள் அடங்கிய பாக்கெட்டுகள், தூத்துக்குடி மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் 40 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.20 மதிப்புடைய ஒரு காய்கறி விதை பாக்கெட்டுக்கு அரசு மானியமாக ரூ.8 வழங்கப்படுகிறது. பயனாளிகள் ரூ.12 செலுத்தி, விதை பாக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம். 

இதற்காக நடப்பாண்டில், மாவட்டத்தில் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு பயனாளிகளும் அதிகபட்சமாக 6 காய்கறி பாக்கெட்டுகள் வரை பெறலாம். மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்து 600 பயனாளிகள்பயன் பெறுவார்கள். இந்த காய்கறி விதைகள் பாக்கெட்டுகளை தூத்துக்குடி மாவட்ட புறநகர் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலம் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD





New Shape Tailors






Thoothukudi Business Directory