» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துபாயில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர் தற்கொலை : மனைவி, மகள்களை பிரிந்ததால் சோகம்

சனி 13, ஜனவரி 2018 8:42:55 AM (IST)

துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி, மகளை பிரிந்து வாழந்த அவர் சோக முடிவை தேடியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரை சேர்ந்தவர் முருகன் (46). இவர் துபாய் நாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே மனைவி, 2 மகள்களையும் அழைத்து கொண்டு தனியாக சென்று விட்டார். பின்னர் முருகன் தனியாக வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர், சொந்த ஊருக்கு வந்தார். 

பின்னர் அவர் நேற்று முன்தினம் இரவில் பொன்னங்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

crescentopticals


Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory